ஊழல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊழல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா எச்சரிக்கை

Added : ஆக 19, 2021
Share
பெங்களூரு: ''ரவுடிகள், கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துள்ள ஊழல் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாராகவுள்ளது. அவர்களை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம். நேர்மையாக, திறமையாக பணியாற்றும் போலீசாரை ஊக்குவிப்போம்,''என, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.கைது பெங்களூரின் பல பகுதியில் திருடப்பட்ட பொருட்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்;
ஊழல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா  எச்சரிக்கை

பெங்களூரு: ''ரவுடிகள், கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துள்ள ஊழல் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாராகவுள்ளது. அவர்களை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம். நேர்மையாக, திறமையாக பணியாற்றும் போலீசாரை ஊக்குவிப்போம்,''என, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.


கைது

பெங்களூரின் பல பகுதியில் திருடப்பட்ட பொருட்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்; குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். திருடு போன பொருட்கள், அமைச்சர் அரக ஞானேந்திரா முன்னிலையில் உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:போலீசார் 27 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 32 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப்போருட்களை கைப்பற்றியுள்ளனர். தங்க நகைகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன.மகிழ்ச்சிஎன் போலீஸ் துறை, என் பெருமை. போலீசார் நேர்மையாக பணியாற்றுகின்றனர்.

தங்கநகைகளை பறிகொடுத்து, திரும்ப பெற்றவர்களின் கண்களில், நான் மகிழ்ச்சியை கண்டேன். போலீஸ் துறையால் யாரோ ஒருவர் செய்த தவறால், மொத்த துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ரவுடிகள், கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துள்ள, ஊழல் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாராகவுள்ளது. அவர்களை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம். நடவடிக்கை நேர்மையாக, திறமையாக பணியாற்றும் போலீசாரை ஊக்குவிப்போம். ஊழலில் ஈடுபட்ட போலீசார் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்போம்.

ஊழல்வாதிகளை எந்த காரணத்துக்காகவும், நான் மன்னிக்கமாட்டேன்.போலீசார் இடமாற்ற விதிமுறையில், அனைத்தும் சரியாகவுள்ளது என, நான் கூறமாட்டேன். இடமாற்றத்தில் வெளிப்படையை கொண்டு வர, நான் நேர்மையான முறையில் முயற்சிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X