பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் வினாயகர் சிலை விற்பனைக்கு பாதிப்பு! வியாபாரிகள், சிலை தயாரிப்பாளர்கள் கவலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு: இரண்டு ஆண்டுகளாக, வினாயகர் சிலைகள் விற்பனைக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதையடுத்து, ஏழைகளான சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கொரோனாவால் வினாயகர் சிலை விற்பனைக்கு பாதிப்பு! வியாபாரிகள், சிலை தயாரிப்பாளர்கள் கவலை

பெங்களூரு: இரண்டு ஆண்டுகளாக, வினாயகர் சிலைகள் விற்பனைக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதையடுத்து, ஏழைகளான சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகைக்கு இரு மாதங்களுக்கு முன்பே, சிலைகளுக்கான ஆர்டர்கள் குவிவது வழக்கம். வீடுகள், வீதிகள், தனியார் நிறுவனங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதால், விநாயகர் சிலைகள் அமோகமாக விற்பனையாகும்.

பெரும்பாலும் மிகவும் ஏழைகளான இந்த சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகளுக்கு கொஞ்ச வருவாய் கிடைத்து வந்தது.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவுவதால், விழாக்கள், பண்டிகைகளை கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. இதனால், வினாயகர் சிலைகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன.சிலைகள் தயாரிக்கும் பலர், பாரம்பரியமாக இப்பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மிகவும் ஏழைகள். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவின் கங்கை ஆற்றிலிருந்து, தரமான மண்ணை எடுத்து வந்து, வினாயகர் சிலை தயாரிக்கின்றனர்.லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, தயாரித்திருந்த சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.முந்தைய ஆண்டுகளில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முன்பே, வியாபாரம் களை கட்டும். விநாயகர், கவுரி சிலைகள் மளமளவென விற்பனையாகும்.

பெங்களூரில் தயாரிக்கப்பட்ட, பல வடிவங்களிலான வினாயகர் சிலைகள், வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்.பண்டிகைக்காகவே குஜராத், பஞ்சாப், சூரத், ஒடிஷா உட்பட பல பகுதிகளிலிருந்து விதவிதமான உடைகள் பெங்களுக்கு வரும். வினாயகர் சதுர்த்திக்கு, பெருமளவில் உடைகளும் விற்பனையாகும். பூக்கள் விளைவிக்கும் விவசாயிகளும் கூட, பண்டிகைக்கு விற்றால், அதிக லாபம் கிடைக்கும் என கருதி, அறுவடை செய்யாமல் ரோஜா, சாமந்தி, செண்டுப்பூ, மல்லிகை என, மற்ற பூக்களை செடிகளிலேயே வளர்த்தனர்.இந்த ஆண்டும் கூட, விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட, மாநில அரசு விதிமுறை வகுத்துள்ளது.

இதனால் வினாயகர், கவுரி சிலைகள் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள், ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர், பந்தல் போடுவோர், துணி வியாபாரிகள், பட்டாசு, பூ, பழங்கள் பூஜை பொருட்கள் விற்பவர்கள் என பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.வினாயகர் சிலை தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:ஆயிரக்கணக்கான குடும்பங்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வினாயகர் சதுர்த்தி தயாரிக்கும் தொழிலை நம்பியே, வாழ்க்கை நடத்துகின்றனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான வினாயகர் உற்சவ கமிட்டிகள் உள்ளன.

தற்போது பண்டிகை கொண்டாட, கட்டுப்பாடு விதித்துள்ளதால், வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.பெங்களூரின் ஆர்.வி.சாலையில் மட்டும், வீடுகளில் சிலை அமர்த்த 2 லட்சத்துக்கும் அதிகமான வினாயகர் சிலை விற்பனையானது. பொது இடங்களில் வைக்க, 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய சிலைகள் வாங்குவர். ஆனால் இம்முறை வியாபாரமே இல்லாமல், வீதிக்கு வந்துள்ளனர்.மும்பையில் 4 அடி உயரத்திற்கு சிலைகள் வைக்க, அரசு அனுமதியளித்துள்ளது. ஹைதராபாத்திலும் கூட, அதுபோன்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அது போன்று கர்நாடகாவில், கொரோனா விதிமுறைகளின்படி, சிலைகள் அமர்த்த வாய்ப்பளிக்க வேண்டும்.லட்சக்கணக்கில் முதலீடு செய்து, தயாரித்துள்ள சிலைகளை நாங்கள் என்ன செய்வது... அரசு எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சிலைகளை விற்க அனுமதியளிக்கட்டும். கொரோனா விதிமுறைபடி அனைத்தும் நடக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X