சிட்டி கிரைம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மூதாட்டி தீக்குளித்து தற்கொலைமாதவரம்: மாதவரம் கே.கே.ஆர்.நகர் இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகம், 62. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று அதிகாலை, குளியலறையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் .சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி, காலை 9:00 மணி அளவில்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மாதவரம்: மாதவரம் கே.கே.ஆர்.நகர் இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகம், 62. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று அதிகாலை, குளியலறையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் .சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி, காலை 9:00 மணி அளவில் இறந்தார். இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பூரில் 4 ரவுடிகள் சுற்றிவளைப்பு

செம்பியம்: செம்பியம் தனிப்படை போலீசார், பெரம்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.அதன்படி, ரவுடிகளின் வீடுகளை சுற்றிவளைத்தனர். இதில், பெரம்பூர், அகரம் பகுதியைச் சேர்ந்த கதிரவன், 28, அம்பத்துாரைச் சேர்ந்த சரவணன், 25, அயப்பாக்கத்தைச் சேர்ந்த நேரு சஞ்சய், 18, சதீஷ், 25, ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

பட்டாபிராம்: பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ், 30; ரயில்வே ஊழியர். இவர் வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது பூட்டுடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 1 சவரன் நகை, 150 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்துபட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X