பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து பயிற்சி பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1,484 பயிற்சி பணியாளர்களை பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில போக்குவரத்து கழகம் அரசின் அனுமதி இல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் நடத்தினர்.போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் விதிமுறைக்கு புறம்பாக, பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழக பயிற்சி பணியாளர்களும் போராட்டத்தில்

பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1,484 பயிற்சி பணியாளர்களை பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்து கழகம் அரசின் அனுமதி இல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் நடத்தினர்.போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் விதிமுறைக்கு புறம்பாக, பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழக பயிற்சி பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, பயிற்சி பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டுமெனமாநகராட்சி போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஓட்டுநர், நடத்துநர், மற்றும் அலுவலக பணிகளில் சேர உள்ளவர்கள், தொழில்நுட்பட பிரிவில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும், பணியில் சேர்வது தொடர்பாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளிலும் மொத்தமாக 1484 பேர் பயிற்சியாளர்களாக உள்ளனர். அவர்கள், விதிமுறைகளை பின்பற்றி, நற்சான்றிதழ் பெறுவதற்கு பதிலாக, அரசின் அறிவிப்பையும் மீறி போக்குவரத்து கழகத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.பணியில் சேர்ந்த பின், இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X