பொது செய்தி

இந்தியா

துணை ஜனாதிபதி வருகை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பல்லாரி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாளை மற்றும் நாளை மறுநாள், துங்கபத்ரா அணை, வரலாற்று பிரசித்தி பெற்ற ஹம்பிக்கு வருகை தருகிறார்.ஹூப்பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், விஜயநகர் மாவட்டம், ஹொஸ்பேட் நகரின் விளையாட்டு அரங்குக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் குடும்பத்துடன் நாளை மாலை வருகிறார். துங்கபத்ரா அணையை பார்வையிடுகிறார்.மறுநாள் ஆக., 21ல் உலக பிரசித்தி
துணை ஜனாதிபதி வருகை

பல்லாரி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாளை மற்றும் நாளை மறுநாள், துங்கபத்ரா அணை, வரலாற்று பிரசித்தி பெற்ற ஹம்பிக்கு வருகை தருகிறார்.ஹூப்பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், விஜயநகர் மாவட்டம், ஹொஸ்பேட் நகரின் விளையாட்டு அரங்குக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் குடும்பத்துடன் நாளை மாலை வருகிறார்.

துங்கபத்ரா அணையை பார்வையிடுகிறார்.மறுநாள் ஆக., 21ல் உலக பிரசித்தி பெற்ற ஹம்பியின் நினைவிடங்களை காண்பார். இங்குள்ள விருபாகேஷ்வரர் கோவில், கடலே காளு, சாசுவே காளு வினாயகர் மண்டபங்கள், கிருஷ்ணர் கோவில், கமல மஹால், விஜய விட்டல கோவில், கல் தேர் உட்பட, பல்வேறு இடங்களை பார்வையிடுவார்.

அன்றிரவு அங்கேயே தங்குவார்.ஆக., 22ல் சிறப்பு ஹெலிகாப்டரில், ஹூப்பள்ளி விமான நிலையத்துக்கு செல்வார். அவரை வரவேற்கவும், முன்னேற்பாடு நடக்கிறது. மழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூடி சரி செய்யப்படுகிறது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஏறி, இறங்க வசதியாக தற்காலிக மூங்கில் படிகள் அமைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X