பொது செய்தி

இந்தியா

சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ரூ.11,040 கோடி நிதி

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்துக்கு, 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.நம் நாட்டில் ஆண்டுக்கு 2.4 கோடி டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 7,300 கோடி ரூபாய்
PM Modi, Mega Plan, Cooking Oil, Cabinet, Announce, Oil Mission

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்துக்கு, 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நம் நாட்டில் ஆண்டுக்கு 2.4 கோடி டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 கோடி டன் சமையல் எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து பாமாயிலும், பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த இறக்குமதியில் பாமாயிலின் அளவு 55 சதவீதமாக உள்ளது. இதையடுத்து உள்நாட்டிலேயே பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.


latest tamil news



இதையொட்டி சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து, பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்துக்கு, 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் பாமாயிலின் உள்நாட்டு உற்பத்தியை, 2025 - 26க்குள், 11 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
19-ஆக-202121:49:12 IST Report Abuse
Gnanam சமையலுக்கு பாமாயிலைவிடவும் தேங்காய் எண்ணெய் பொருத்தமானது, வாசனை மிக்கது, உடம்புக்கும் நல்லது என்று யாரும் சொல்லவில்லையா?
Rate this:
Cancel
Kanagaraj Easwaran - Aizawl,இந்தியா
19-ஆக-202117:01:43 IST Report Abuse
Kanagaraj Easwaran எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப்பெருக்குவது அதன் மூலம் உண்ணத்தகுந்த எண்ணெய் உற்பத்தியைப்பெருக்குவது மிக நல்ல முயற்சி. ஆனால் இதில் நமது உடலுக்கும் கேடுவிளைவிக்கும் எண்ணெய்ப்பனையை இங்கே உற்பத்தி செய்வது நல்லது அல்ல. எண்ணெய்ப்பனை பயிரிடுவதால் காடுகள் அழிக்கப்படும் அபாயம் உண்டு. சமவெளிப்பகுதிகளில் எண்ணெய்ப்பனையை பயிரிடுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்துவிளைவிக்கலாம். காலம் காலமாக இங்கே விளையும் எள் தென்னை, மணிலா போன்றவற்றினைப் புன்செய் நிலப்பரப்பில் அதிகரிப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-ஆக-202116:31:57 IST Report Abuse
ஜெயந்தன் ஏழு வருடங்களாக எண்ணெயே இல்லாமல் வடை சுட்டவருக்கு... இப்ப மட்டும் எதற்கு எண்ணெய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X