பொது செய்தி

இந்தியா

500 ரூபாய்க்கு சிறை வாழ்க்கை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெலகாவி: சிறைக்குள் வாழ்க்கை எப்படி என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு, ஒரு நாள் சிறையில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.சிறைக்குள் வாழ்க்கை எப்படி இருக்கும்; அங்கு கைதிகள் எப்படி இருப்பர் என்பதை தெரிந்து கொள்ள, பலருக்கும் ஆர்வம் இருக்கும். இவர்களுக்காகவே, பெலகாவி ஹின்டல்கா மத்திய சிறை அதிகாரிகள், 'கைதிகளின் வாழ்க்கையில்

பெலகாவி: சிறைக்குள் வாழ்க்கை எப்படி என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு, ஒரு நாள் சிறையில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்காக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.சிறைக்குள் வாழ்க்கை எப்படி இருக்கும்; அங்கு கைதிகள் எப்படி இருப்பர் என்பதை தெரிந்து கொள்ள, பலருக்கும் ஆர்வம் இருக்கும். இவர்களுக்காகவே, பெலகாவி ஹின்டல்கா மத்திய சிறை அதிகாரிகள், 'கைதிகளின் வாழ்க்கையில் ஒருநாள்' என்ற புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.இத்திட்டத்தின் மூலம், 24 மணி நேரம் சிறை அனுபவத்தை, சுற்றுலா பயணியர் பெறலாம். சிறை வாழ்க்கையின் அனுபவத்தை பெற விரும்புவோர், 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஹின்டல்கா சிறை அதிகாரிகள் கூறியதாவது:சிறைக்கு வரும் சுற்றுலா பயணியர், கைதிகளை போல நடத்தப்படுவர். காலை முதல் இரவு வரை, கைதிகளாகவே இருக்க வேண்டும். கைதிகளின் சீருடை சிறை அனுபவத்தை பெற விரும்புவோருக்கு, கைதிகளின் சீருடை, எண், அறைகள், கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு அளிக்கப்படும்.

கைதிகள் செய்யும் வேலைகளையும் செய்யலாம்.சிறையில் தங்கும் சுற்றுலா பயணியரை, சிறை ஊழியர்கள், அதிகாலை 5:00 மணிக்கு எழுப்பி விடுவர். டீ கொடுப்பதற்கு முன், அறையை சுத்தம் செய்யும் வேலையை செய்ய வேண்டும். அதன்பின் காலை உணவு வழங்கப்படும். இறைச்சி உணவு காலை 11:00 மணிக்கு சாதம், சாம்பார் தரப்படும். இரவு 7:00 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும்.

பொதுவாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை, இறைச்சி உணவு வழங்கப்படும். வார இறுதியில் தங்க வருவோருக்கும், இறைச்சி உணவு கிடைக்கும்.பகல் வேளையில் பணிகள் முடிந்த பின், மெத்தைகளை பெற்று, மற்ற கைதிகளுடன் படுத்துறங்க வேண்டும். சிறை அறைகள் பூட்டப்படும்.சிறைக்கு வரும் சுற்றுலா பயணியர், இங்குள்ள கடுமையான குற்றவாளிகளை, நேருக்கு நேர் சந்திக்க நேரிடலாம். ஹின்டல்கா சிறையில், மரண தண்டணைக்கு ஆளான, 29 கைதிகள் உள்ளனர்.

இதில் தண்டுபாளையா கும்பலை சேர்ந்தவர்கள், பாலியல் மற்றும் கொலைக்குற்றவாளி உமேஷ் ரெட்டியும் உள்ளனர்.விழிப்புணர்வு கைதிகளின் வாழ்க்கையை பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, திட்டத்தின் நோக்கமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X