முதல்வர் பெலகாவி சுற்றுப்பயணம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு : வரும், 21ல், விஜயபுரா, பெலகாவி மாவட்டங்களில், முதல்வர் பசவராஜ் பொம்மை, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆலமட்டி அணைக்கு பூஜை செய்கிறார்.முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆகஸ்ட் 21ல் காலை 8:00 மணிக்கு, பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் விஜயபுராவுக்கு செல்கிறார். 11:00 மணிக்கு ஆலமட்டி அணைக்கு சிறப்பு பூஜை செய்கிறார். இம்மாவட்டத்தின் மக்கள்

பெங்களூரு : வரும், 21ல், விஜயபுரா, பெலகாவி மாவட்டங்களில், முதல்வர் பசவராஜ் பொம்மை, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆலமட்டி அணைக்கு பூஜை செய்கிறார்.முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆகஸ்ட் 21ல் காலை 8:00 மணிக்கு, பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் விஜயபுராவுக்கு செல்கிறார். 11:00 மணிக்கு ஆலமட்டி அணைக்கு சிறப்பு பூஜை செய்கிறார்.

இம்மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஆலோசனை நடத்துகிறார்.அன்று மதியம் 1:00 மணிக்கு, ஆலமட்டியிலிருந்து ஹெலிகாப்டரில், பெலகாவிக்கு முதல்வர் பயணிக்கிறார்.மதியம் 2:30 மணிக்கு, பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில், கொரோனாவை கட்டுப்படுத்துவது, வெள்ள பாதிப்பு குறித்து, மக்கள் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்துவார்.இரவு 7:20 மணிக்கு, பெலகாவியின் சாம்ப்ரா விமான நிலையத்திலிருந்து, புறப்படும் முதல்வர், 8:50 மணிக்கு பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்குவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X