நகரங்களில் இவ்வளவு வளர்ச்சியா? வாயைப் பிளந்த பயங்கரவாதிகள்!

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர்காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனால் தலிபான்களின் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த, 1996 - 2001 வரை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. கடும் பழமைவாதிகளான தலிபான்கள் ஆட்சியின்போது கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்தன.
Afghanistan, Taliban, Afghan

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர்காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனால் தலிபான்களின் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த, 1996 - 2001 வரை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. கடும் பழமைவாதிகளான தலிபான்கள் ஆட்சியின்போது கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்தன. படிப்பதற்கு, வேலை பார்ப்பதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. முழு உடலையும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டால் பொது இடத்தில் தண்டனை வழங்கப்படும்.


latest tamil news


கடந்த, 2001ல் அமெரிக்கப் படைகள் வந்த பின் கடந்த, 20 ஆண்டுகளில் காபூல் உட்பட பல நகரங்களில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் மலை மற்றும் கரடுமுரடான பகுதிகளில் இருந்து வந்த தலிபான்கள், காபூல் உள்ளிட்ட நகரங்களுக்குள் நுழைந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

பளபளப்பான சாலைகள், மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், பிரமாண்ட அலுவலகங்கள் என, அனைத்தும் அவர்களுக்கு புதிதாக இருந்தது. தலிபான்கள் ஆட்சியின்போது, 'டிவி'க்கு அனுமதி கிடையாது. கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களும் கிடையாது. ஆனால் தற்போது காபூலில் மட்டும் பல புதிய 'டிவி சேனல்'கள் உள்ளன.

இது போன்ற வசதிகளை பார்த்து தலிபான்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் ஓட்டும் கார்களை ஓட்டுவது, உடற்பயிற்சி கூடங்களில் உள்ள கருவிகளில் பயிற்சி செய்வது என, தலிபான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சாலைகளில் ரோந்து செல்லும்போது இவர்களை பார்த்து சில பெண்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர். மிகவும் மரியாதையாக அவர்களிடம் பேசியுள்ளனர் தலிபான்கள்.


latest tamil news



இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் புதிய வகை மொபைல் போன்கள் உள்ளன. பல இடங்களில், 'செல்பி' எடுத்து மகிழ்ந்துள்ளனர். 'யாரையும் பழிவாங்க மாட்டோம். பெண்கள் அரசு வேலைக்கு வர வேண்டும்'என, தலிபான்கள் தற்போது கூறியுள்ளனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் மக்களிடையே இன்னும் அச்சம் முழுமையாக மறையவில்லை. இதற்கிடையே தலிபான்கள் போர்வையில் குற்றவாளிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


விரைவில் 'ஜி - 7' கூட்டம்


ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.அடுத்த வாரத்தில், 'ஜி - 7' நாடுகளின் கூட்டத்தை 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன், இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஆக-202121:13:18 IST Report Abuse
Ramesh Sargam இனி வளர்ச்சி என்பதே இல்லாமல் செய்துவிடுவார்கள் இந்த பயங்கரவாதிகள். இனி துப்பாக்கி சூடு, வீதிகளில் பிணக்குவியல், ஊரே ஓர் சுடுகாடு மாறி ஆகிவிடும். ஈ, எறும்பை கூட பார்க்க முடியாது. பிணங்கள் மீதும்...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
19-ஆக-202120:37:10 IST Report Abuse
தமிழ்வேள் பாலைவனம் ஒட்டகம் 72 இவை தவிர வேறு ஒன்றுமே தெரியாது ....இறைத்தூதர் வழிகாட்டல் அப்படி ..இந்த லட்சணத்தில் இந்த மதம் உலகமெல்லாம் பரவவேண்டுமாம் ....விளங்கிடும் ..
Rate this:
INDIAN - madurai,இந்தியா
20-ஆக-202109:42:42 IST Report Abuse
INDIANயாரோ செய்கிற தவறுக்கு 1000 ஆண்டுக்கு முன்னாள் வாழ்த்த இறை தூதரை குறை சொல்ல வேண்டாம் , இப்படி சொல்வதானால் உங்களுக்கு சந்தோசம் என்றல் சொல்லுங்கள் , ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை , இஸ்லாம் என்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை .ஜைஹிந் .வந்தே மாதரம்....
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-ஆக-202120:09:04 IST Report Abuse
Rajagopal ஹிந்துஸ்தானில் முதன் முதலாக அரசர்களைத் தோற்கடித்து உள்ளே நுழைந்த துருக்கியர்கள் இந்த தாலிபான் போலத்தான் இருந்தார்கள். ஆனால் அது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால். வந்தவர்களும், இந்த மண்ணின் வளம், காலை எல்லாவற்றையும் வியந்துதான் இருந்திருப்பார்கள், அவற்றை சின்னாபின்னமாக்குவதற்கு முன்னால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X