நகரங்களில் இவ்வளவு வளர்ச்சியா? வாயைப் பிளந்த பயங்கரவாதிகள்!| Dinamalar

நகரங்களில் இவ்வளவு வளர்ச்சியா? வாயைப் பிளந்த பயங்கரவாதிகள்!

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (15)
Share
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர்காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனால் தலிபான்களின் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த, 1996 - 2001 வரை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. கடும் பழமைவாதிகளான தலிபான்கள் ஆட்சியின்போது கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்தன.
Afghanistan, Taliban, Afghan

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர்காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனால் தலிபான்களின் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த, 1996 - 2001 வரை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. கடும் பழமைவாதிகளான தலிபான்கள் ஆட்சியின்போது கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்தன. படிப்பதற்கு, வேலை பார்ப்பதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. முழு உடலையும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டால் பொது இடத்தில் தண்டனை வழங்கப்படும்.


latest tamil news


கடந்த, 2001ல் அமெரிக்கப் படைகள் வந்த பின் கடந்த, 20 ஆண்டுகளில் காபூல் உட்பட பல நகரங்களில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் மலை மற்றும் கரடுமுரடான பகுதிகளில் இருந்து வந்த தலிபான்கள், காபூல் உள்ளிட்ட நகரங்களுக்குள் நுழைந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

பளபளப்பான சாலைகள், மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், பிரமாண்ட அலுவலகங்கள் என, அனைத்தும் அவர்களுக்கு புதிதாக இருந்தது. தலிபான்கள் ஆட்சியின்போது, 'டிவி'க்கு அனுமதி கிடையாது. கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களும் கிடையாது. ஆனால் தற்போது காபூலில் மட்டும் பல புதிய 'டிவி சேனல்'கள் உள்ளன.

இது போன்ற வசதிகளை பார்த்து தலிபான்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் ஓட்டும் கார்களை ஓட்டுவது, உடற்பயிற்சி கூடங்களில் உள்ள கருவிகளில் பயிற்சி செய்வது என, தலிபான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சாலைகளில் ரோந்து செல்லும்போது இவர்களை பார்த்து சில பெண்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர். மிகவும் மரியாதையாக அவர்களிடம் பேசியுள்ளனர் தலிபான்கள்.


latest tamil newsஇந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் புதிய வகை மொபைல் போன்கள் உள்ளன. பல இடங்களில், 'செல்பி' எடுத்து மகிழ்ந்துள்ளனர். 'யாரையும் பழிவாங்க மாட்டோம். பெண்கள் அரசு வேலைக்கு வர வேண்டும்'என, தலிபான்கள் தற்போது கூறியுள்ளனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் மக்களிடையே இன்னும் அச்சம் முழுமையாக மறையவில்லை. இதற்கிடையே தலிபான்கள் போர்வையில் குற்றவாளிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


விரைவில் 'ஜி - 7' கூட்டம்


ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.அடுத்த வாரத்தில், 'ஜி - 7' நாடுகளின் கூட்டத்தை 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன், இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து வருகிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X