பொது செய்தி

இந்தியா

கோவில் சொத்துக்களை கணக்கெடுக்க அரசு முடிவு ஆக்கிரமிப்பை அகற்றவும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''கர்நாடக ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்களை கணக்கெடுத்து, ஆக்கிரமிப்பிலிருந்து அவற்றை மீட்டு, பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கர்நாடக புதிய ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெங்களூரு விகாஸ்
கோவில் சொத்துக்களை கணக்கெடுக்க அரசு முடிவு ஆக்கிரமிப்பை அகற்றவும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

பெங்களூரு: ''கர்நாடக ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்களை கணக்கெடுத்து, ஆக்கிரமிப்பிலிருந்து அவற்றை மீட்டு, பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கர்நாடக புதிய ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள அலுவலகத்தில், நேற்று பூஜை செய்து பணியில் அமர்ந்தார். அவருடன் அவரது கணவரும், பெலகாவி பா.ஜ., - எம்.பி.,யுமான அன்னாசாப் ஜொல்லே, துறை கமிஷனர் ரோகிணி சிந்துாரி உட்பட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

ஆலோசனைஹிந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சசிகலா ஜொல்லே ஆலோசனை நடத்தினார்.பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக, 'ஏ, பி, சி' தர கோவில்களின் சொத்து குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அப்போது தான் அரசின் சொத்து எவ்வளவு இருக்கும் என்பது தெரியும்; வருவாய் ஈட்ட வசதியாக இருக்கும்.கோவில்களில் துாய்மைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தங்கும் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.எந்தெந்த கோவில்களில் பக்தர்கள் யாத்ரீகர் தங்கும் விடுதிகள் உள்ளன. எந்தெந்த கோவில்களில் இல்லை என்பதை அறிந்து, புதிதாக அமைக்கப்படும்.மஹாராஷ்டிராவின் பண்டரிபுரம் மற்றும் துளஜாபவானி கோவில்களில், கர்நாடக அரசு சார்பில், திருப்பதி போல யாத்ரீகர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும். ஸ்ரீசைலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.அறிவுரைஅதுபோல, தமிழகம், கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், கர்நாடகா சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. கட்டம் கட்டமாக தரிசனத்துக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து யோசிக்கப்படும்.

இலவச கூட்டு திருமண திட்டம் சில கோவில்களில் மட்டும் நடத்தப்படுகிறது. இதை, மாநிலத்தின் மற்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.''18.08.2021 / செய்தி: அர்வின்குமார்: 7:12 / MD: 7:17*19_DMR_0011ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இடம்: விகாஸ் சவுதா, பெங்களூரு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X