இந்தியா

பெங்களூரு - மைசூரு இடையிலான பத்து வழி சாலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு : மிகவும் எதிர்ப்பார்க்கப்படும், பெங்களூரு --- மைசூரு இடையிலான பத்து வழி பாதை அமைக்கும் பணிகள், இன்னும் ஓராண்டில் முடிவடைய வாய்ப்புள்ளது. அதன்பின் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம், பாதியாக குறையும்.வாகன நெருக்கடி பெங்களூரு -- மைசூரு இடையிலான துாரம், 135 கி.மீ., சென்றடைய குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. நாளுக்கு நாள் வாகன நெருக்கடி

பெங்களூரு : மிகவும் எதிர்ப்பார்க்கப்படும், பெங்களூரு --- மைசூரு இடையிலான பத்து வழி பாதை அமைக்கும் பணிகள், இன்னும் ஓராண்டில் முடிவடைய வாய்ப்புள்ளது.

அதன்பின் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம், பாதியாக குறையும்.வாகன நெருக்கடி பெங்களூரு -- மைசூரு இடையிலான துாரம், 135 கி.மீ., சென்றடைய குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரிப்பதால், அத்தியாவசிய பணிகளுக்காக செல்வோர், தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், மத்திய அரசு நான்கு வழி நெடுஞ்சாலையை, பத்து வழி சாலையாக விஸ்தரிப்பதன் மூலம், சாலையை தரம் உயர்த்த முடிவு செய்தது.ஏற்கனவே முதற்கட்ட பணிகள், மும்முரமாக நடக்கிறது. அடுத்தாண்டு இறுதிக்குள், பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது. பணிகள் முடிவடைந்தால், பெங்களுரு -- மைசூரு இடையிலான பயண நேரம், 90 நிமிடமாக குறையும். இத்திட்டத்துக்காக 8,172 கோடி ரூபாய் செலவாகும்.பின்னடைவு கொரோனா முதல் அலையால், நெடுஞ்சாலை பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பணிகள் துவங்கும் போது, 18 மாதங்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனாவால் நான்கு மாதம், பணிகள் நிறுத்தபட்டது. எனவே காலக்கெடு 21 மாதங்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, பெங்களூரின் கெங்கேரியிலிருந்து, பிடதி, ராம்நகர், சென்னப்பட்டணா, மத்துாரின் நிடகட்டாவரை, 56 கி.மீ., சாலை அமைக்கப்படுகிறது.இரண்டாவது கட்டமாக, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக, மைசூரின் கொலம்பியா ஏஷியா மருத்துவமனை வரை, 61 கி.மீ., சாலை பணிகள் நடக்கும்.

மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் அஸ்வத் நாராயணா கூறியதாவது:பெங்களூரு -- மைசூரு இடையிலான, நெடுஞ்சாலை பணிகள், 2022 அக்டோபரில் முடிவடையும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கையளித்துள்ளார். நெடுஞ்சாலை பணிகள் முடிந்தால், இவ்விரு நகரங்களுக்கு இடையிலான துாரம், பாதியாக குறையும்.பெங்களூரு, மைசூரு நகரங்களின் வளர்ச்சிக்கும் அது வாய்ப்பாக இருக்கும். ஏற்கனவே முதற்கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. மேலும் சில நாட்களில், இச்சாலை மக்களின் போக்குவரத்துக்கு, திறந்து விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X