உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் இந்தியாவின் ராதாகிஷன் தமானி!

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: டிமார்ட் சூப்பர்மார்கெட் கடைகளின் உரிமையாளர் ராதகிஷன் தமானி சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தமானி 98-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில், அவர் 117-வது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசிம் பிரேம்ஜி, பல்லோன்ஜி மிஸ்ரி,
DMart, Owner, Radhakishan Damani, World, Richest People, Net Worth, டிமார்ட், ராதாகிஷன் தமானி, பணக்காரர்

புதுடில்லி: டிமார்ட் சூப்பர்மார்கெட் கடைகளின் உரிமையாளர் ராதகிஷன் தமானி சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தமானி 98-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில், அவர் 117-வது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசிம் பிரேம்ஜி, பல்லோன்ஜி மிஸ்ரி, ஷிவ் நாடார், லட்சுமி மிட்டல் ஆகியோரும் உலகின் நூறு பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்தியர்கள் ஆவர்.


latest tamil news


மும்பையில் மார்வாடி குடும்பத்தில் பிறந்த தமானி, அங்கு ஒற்றை அறை கொண்ட வீட்டில் வளர்ந்தார். மும்பை பல்கலையில் வணிகவியல் படிப்பில் சேர்ந்தவர், ஒர் ஆண்டுக்கு பின் படிப்பைப் பாதியிலேயே நிறுதிவிட்டார். பங்குச்சந்தைகள் இயங்கும் தலால் தெருவில் வேலைப் பார்த்த அவரது தந்தை இறந்ததால், தனது பால் பியரிங் தொழிலை விட்டுவிட்டு பங்குச்சந்தை புரோக்கர் மற்றும் முதலீட்டாளர் ஆனார். 2000-த்தில் பங்குச்சந்தை தொழிலையும் விட்டுவிட்டு டிமார்ட் எனும் பெயரில் சூப்பர்மார்கெட் தொழிலில் இறங்கினார். அதில் டி என்பது தமானியை குறிக்கும்.

2002-ல் முதல் டிமார்ட் தொடங்கப்பட்டது. 2010-ல் அது 25 கடையாக வளர்ந்தது. அதன் பிறகு நிறுவனம் மேலும் வேகமெடுத்தது. 2017-ல் அவென்யூ சூப்பர்மார்ட் என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2020-ல் 1.2 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நான்காவது பெரிய பணக்காரர் ஆனார். பங்குச்சந்தையில் பணியாற்றிய போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கு பங்கு வர்த்தக உத்திகளை கற்றுக்கொடுத்தவர். ஊடக வெளிச்சத்தை விரும்பாத இவர் அரிதாகவே பேட்டிகளை தந்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
19-ஆக-202117:53:54 IST Report Abuse
Rajas தொழில் துறையில் இவரை மிகவும் பழமைவாதி என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழமை வாதம் தான் வெற்றிகளை கொடுத்தது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும், இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள்’ லிஸ்டில் 10 வருடங்களுக்கு முன் இப்படி பட்ட ஒருவர் இந்த பட்டியலில் வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. டிமார்ட் இந்தியாவில் சுமார் 11 மாநிலம், 1 யூனியன் பிரதேச பகுதிகளில் ரீடைல் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் பிற ரீடைல் நிறுவனங்களைப் போல் கடைகளை வாடகைக்கும், குத்தகைக்கும் எடுக்காமல், கட்டிடம் அல்லது நிலத்தை வாங்கி அதில் வர்த்தகம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. விலை அதிகம் உள்ள இடங்களில் இவரது டிமார்ட் நிறுவனம் இருப்பதைக் காண்பது அரிது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நடுத்தர வர்க்க குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் இவரது கடை இருக்கும். அதுவும் கடை இருக்கும் இடமும் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும். இதன்காரணமாக மற்ற மார்ட்களைவிட டி-மார்ட்டில் பொருள்களின் விலை மிகவும் குறைவாக கிடைக்கும். எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட் என மிஸ்டர் வொயிட்' ஆக வலம்வரும் தமனி மிகவும் அமைதியான, எளிமையான மனிதர். இதுவரை எந்த சர்ச்சையில் சிக்காதவர்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
19-ஆக-202120:46:18 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஇருந்தபோதிலும் டீம்கா அடிமையே ஒரே மிரட்டலில் தொழிலதிபர்கள் தனது பிசினஸை நம்மிடம் விட்டுவிட்டு ஓடவேண்டும் என்று நினைப்பவர்கள் உனது தலைவர்கள் இவரை நீ புகழ்வது வியப்பாக இருக்கிறது...
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
19-ஆக-202116:21:29 IST Report Abuse
mrsethuraman  'னி' ல் பெயர் முடிந்தால் பணக்காரன் ஆகி விடலாம் போல் இருக்கிறது .அம்பானி ,அதானி .......
Rate this:
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
19-ஆக-202122:48:12 IST Report Abuse
ஏகன் ஆதன் இன்னும் நல்ல யோசிங்க , நிதி என்று முடிந்தால் உழைக்காமலே பணக்காரன் ஆகலாம் , 'னி' என்று முடிந்தால் உழைத்து தான் பணக்காரன் ஆகா முடியும்...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஆக-202113:33:44 IST Report Abuse
Vena Suna எப்படி ஆட்டையை போடலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X