தலிபான்களுக்கு ஆதரவு? கோவையில் கண்காணிப்பு தீவிரம்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
கோவை: கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூகவலைதள கணக்குகளை என்.ஐ.ஏ., மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல்
Tamilnadu, Coimbatore, Taliban, NIA, தமிழகம், கோவை, தலிபான்கள், தேடுதல், என்ஐஏ

கோவை: கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூகவலைதள கணக்குகளை என்.ஐ.ஏ., மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட, ஐந்து வலைதள கணக்குகளை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். கோவையிலும் ஒரு சிலரின் சமூகவலைதள பதிவுகளை சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.


latest tamil newsகோவையில் ஏற்கனவே ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டு லேப்டாப், சி.டி., கைப்பற்றினர். கேரளா, கனகமலை பகுதியில், ஆறு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக கோவையில் சோதனையிட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், 'கேரளா மற்றும் கோவையில் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், தற்போது கோவை மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களின் சமூகவலைதள கணக்குகள், அவர்களின் கருத்துக்கள், இவர்கள் யாரை பின்தொடர்கிறார்களா போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. சட்டவிரோத கருத்துக்களை யார் பதிவு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக, 15க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
19-ஆக-202120:36:31 IST Report Abuse
sridhar . உண்பது , சுவாசிப்பது , குடிப்பது , கணக்கில்லாமல் பெண்ணோடு கூடுவது எல்லாம் இங்கே . வால் மட்டும் வேறு எங்கோ ஆடுது .
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-ஆக-202120:23:06 IST Report Abuse
elakkumanan எதுக்கு சார் கண்காணிப்பு..............காசுக்கு பிடிச்ச கேடு..........ஒரு கண்டம் ஆன ஏரோபிளானின் டயரில் இந்த உயிரினங்களை கட்டி அந்த புண்ணிய தேசத்துக்கே அனுப்பிவிடுங்கள்....நமக்கும் விடுதலை....அந்த புண்ணிய பூமியை அடைந்து சொர்க்கத்தை கண்டு இந்த உயிரினங்களும் முக்தி அடையும்.........செலவும் மிச்சம்.............இந்தியாவில், சுதந்திரம் என்ற பெயரில், அடாவடித்தனமும், காவலித்தனமும், பிரிவினைவாதமும் அனுமதிக்கப்படுகிறது........நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பவர்களை ஏளனமாக நடத்துகிறது இந்த அரசு...............மத்திய அரசு இன்னும் கடுமையாக வெறியுடன் நடந்துகொள்ளவேண்டும் இதுகளிடம்...........ஏனெனில் , அந்த வெறி அதுகளிடம் இருக்கு..........
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-ஆக-202120:01:59 IST Report Abuse
Ramesh Sargam அது என்னமோ தெரியவில்லை, நமது நாட்டில் ஆகட்டும், அல்லது வெளி நாட்டில் ஆகட்டும், எந்தவித ஒரு தீவிரவாதம் சம்பந்தப்பட்ட அசம்பாவிதங்கள் நடந்தால், உடனே நமது கோவை மாநகரம் பேச்சில் அடிபடுகிறது. அது என்ன கோவை தீவிரவாதிகளின் புகலிடமா...??
Rate this:
visu - Pondicherry,இந்தியா
25-ஆக-202117:05:17 IST Report Abuse
visuஅதுதான் உண்மை காஸ்மீர் போல தீவிரவாதி வந்தால் கூட இவர்கள் அடைக்கலம் தருவார்கள் அப்புறம் என்ன செய்வது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X