"என்னைத் தவிர யாருக்கும் பொருளாதாரம் தெரியாது என சுப்ரமணியசாமி போல கூறுபவர் கற்றுக்கொள்ள முன்வருவாரா..."

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (36) | |
Advertisement
தமிழக அரசின், இரண்டு நிதிநிலை அறிக்கையில் 97 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனை, குஜராத்துக்கு 100 நாட்கள் அனுப்பி, அங்குள்ள நடைமுறையை கற்று, அதன் பின் கடனில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.- பா.ஜ., மாநில துணை தலைவர் துரைசாமி'என்னைத் தவிர வேறு யாருக்கும் பொருளாதாரம் தெரியாது என, சுப்ரமணியசாமி போல கூறுபவர், கற்றுக் கொள்ள முன்வருவாரா...' என,
பேச்சு_பேட்டி_அறிக்கை, பாஜக, துரைசாமி

தமிழக அரசின், இரண்டு நிதிநிலை அறிக்கையில் 97 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனை, குஜராத்துக்கு 100 நாட்கள் அனுப்பி, அங்குள்ள நடைமுறையை கற்று, அதன் பின் கடனில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
- பா.ஜ., மாநில துணை தலைவர் துரைசாமி


'என்னைத் தவிர வேறு யாருக்கும் பொருளாதாரம் தெரியாது என, சுப்ரமணியசாமி போல கூறுபவர், கற்றுக் கொள்ள முன்வருவாரா...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் துரைசாமி பேட்டி



தமிழகத்தில் இப்போது ஆதிக்க ஜாதி, அடிமை ஜாதி என்பதெல்லாம் கிடையாது. அது காலம் கடந்த ஒன்று. இன்றைய சூழலில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பவனே ஆதிக்கம் செலுத்துகிறான்.
- தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி


'இவர்களை விட, பிரிவினைவாதம் பேசும் அரசியல்வாதிகள் தான் அதிக அதிகாரம் கொண்டவர்களாக விளங்குகின்றனர்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி பேட்டி



காங்., தற்போதைய தலைவர் அழகிரியை மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு இளம் தலைவர் ஒருவரை நியமிக்க, காங்., - எம்.பி., ராகுல் திட்டமிட்டுள்ளார். அந்த இளம் தலைவர் கரூர் எம்.பி., ஜோதிமணியா என எனக்கு தெரியாது.
- சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை


'எத்தனை இளரத்தங்களை பாய்ச்சினாலும், தமிழகத்தில் காங்., தேறாது என்கின்றனரே, அ.தி.மு.க.,வினர்...' என, 'போட்டு'க் கொடுக்கத் தோன்றும் வகையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி



latest tamil news


தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு, நிதித்துறையுடன் தமிழ் துறையையும் சேர்த்து வழங்க வேண்டும். அவர் வாயில் இருந்து வரும் செந்தமிழ் நன்கு, 'வறளுகிறது!'
- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி


'அமெரிக்காவில் படித்தவர்; அங்கேயே நீண்ட காலம் வேலை பார்த்தவர். இப்போது, தமிழகத்திற்கு, 'தொண்டாற்ற' வந்துள்ளார். பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்...' என, ஜாடை மாடையாக சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை



வெள்ளை அறிக்கையை அளித்தபோது, மகத்தான மாற்றத்தை பட்ஜெட்டில் தரப் போகின்றனர் என நினைத்தோம். ஆனால், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், பின் ஜோடனை செய்வதும் தான் வரலாறு என்பதை தி.மு.க., நிரூபித்து உள்ளது.
- பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன்


'பல முன்னுதாரணங்கள் இருந்த போதும், எப்படி நம்பினீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி



தமிழகத்தில் இறை உணர்வு, இறை நம்பிக்கை எல்லாருக்கும் உள்ளது. அதையே அரசியலுக்கு, பா.ஜ., பயன்படுத்துகிறது. அதைத் தான் யாரும் விரும்ப மாட்டார்கள்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'கடவுள் இல்லை என சொல்பவர்களுக்கும் இறை நம்பிக்கை இருக்கிறது என நீங்கள் சொன்னால் நாங்கள் நம்ப வேண்டுமா...' என, மடக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
19-ஆக-202122:32:08 IST Report Abuse
Rajas குஜராத் மாடலில் 5-10 பேர் வரை பயனடைந்திருப்பார்கள். இது தான் இவர்களின் வெற்றி குஜராத் முழக்கம்
Rate this:
20-ஆக-202109:39:19 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்கடன்களை அடைத்து விட்டு நிதியை ஒரு மாநிலம் மிச்சப்படுத்துகிறது என்றால் பலனடைபவர்கள் வெறும் சிங்கிள் டிஜிட்டா ? ஆனா உங்களை சொல்லி குத்தமில்லை உங்க முதல்வரின் கணக்குப்பிள்ளை கூட உங்கள மாதிரி அறிவாளிதான்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஆக-202119:46:42 IST Report Abuse
sankaseshan உன்னைப்போன்ற சுவத்துக்கு தான் எழுதியிருக்கேன் மஹாராஜா
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
19-ஆக-202117:21:23 IST Report Abuse
Rajas இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்திற்கு கிடைகின்றன. மத்திய அரசின் பல உதவிகள் குஜரத்திற்க்கே கிடைக்கின்ற்ன. புயல் அடித்தால் கூட உடனே கோடிகளில் உதவி கிடைக்கிறது. கொரநா சமயத்தில் குஜராத்தில் லாக்டவுனால் பாதித்தவர்களுக்கு 6210 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் குஜராத் அரசு Rs 2260 கோடி ரூபாயும் மத்திய அரசு Rs 3950 கோடி ரூபாயும் ஒதுக்கியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X