சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் வாகனம் மோதி புள்ளிமான் பலி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நள்ளிரவில் வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கொள்ளிடம் ஆற்றுப் படுகையிலும் அதிக எண்ணிக்கையிலான பலவகை மான்கள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வரும்போது விபத்தில் சிக்கி
நள்ளிரவில் வாகனம் மோதி புள்ளிமான் பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நள்ளிரவில் வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கொள்ளிடம் ஆற்றுப் படுகையிலும் அதிக எண்ணிக்கையிலான பலவகை மான்கள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வரும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது

இந்நிலையில், இன்று அதிகாலை சீர்காழி அருகே உள்ள அரசூர் ரவுண்டானா அருகே புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தது. தகவலறிந்த சீர்காழி வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில் வனவர் துளசிமாலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று புள்ளிமானை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர் ஆனால், மான் இறந்து விட்டது.

இறந்த 12.5 வயதுள்ள புள்ளி மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் புள்ளிமானை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X