கடற்படை தளங்கள் மீது ட்ரோன் பறக்க தடை

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதன் மீது ட்ரோன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு, அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து, திருநெல்வேலியில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் உள்ளிட்ட கடற்படை தளங்கள் உள்ளன. இந்த
கடற்படை தளங்கள் மீது ட்ரோன் பறக்க தடை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதன் மீது ட்ரோன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு, அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து, திருநெல்வேலியில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் உள்ளிட்ட கடற்படை தளங்கள் உள்ளன. இந்த கடற்படைதளங்களுக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கடற்படை தளங்கள் மீது ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



எனினும், தடை செய்யப்பட்ட இப்பகுதியில் ட்ரோன்கள் உள்ளிட்டவை இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள், தனியார் ஏஜென்சிகள், பொது சிவில் விமான இயக்குநரகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக, 'டிஜிஸ்கை' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் கிடைத்த பிறகு, அதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, பாதுகாப்புத் துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X