அதிமுக எம்எல்ஏ.,க்கள் தாமாகவே வெளியேறினர்: சபாநாயகர் விளக்கம்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: மக்கள் பிரச்னையை பேசும் சபையில் தனிப்பட்ட பிரச்னைகளை எழுப்பக்கூடாது எனவும், நேற்றைய (ஆக.,18) கூட்டத்தொடரின்போது அதிமுக எம்எல்ஏ.,க்கள் தாமாகவே வெளியேறியதாகவும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய (ஆக.,18) நிகழ்வில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக
Tamilnadu, Assembly, ADMK, MLAs, Speaker, Appavu, சபாநாயகர், அப்பாவு, அதிமுக, வெளிநடப்பு, விளக்கம்

சென்னை: மக்கள் பிரச்னையை பேசும் சபையில் தனிப்பட்ட பிரச்னைகளை எழுப்பக்கூடாது எனவும், நேற்றைய (ஆக.,18) கூட்டத்தொடரின்போது அதிமுக எம்எல்ஏ.,க்கள் தாமாகவே வெளியேறியதாகவும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய (ஆக.,18) நிகழ்வில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொய் வழக்கு போடும் திமுக.,வை கண்டிப்பதாக பதாகை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதுடன், நேற்றும், இன்றும் நடக்கும் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன.


latest tamil news


இந்நிலையில், சட்டசபையில் இருந்து அதிமுக.,வினர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு, இன்று சட்டசபையில் விளக்கமளித்தார். அவர் பேசியதாவது: அதிமுக எம்எல்ஏ.,க்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற நான் உத்தரவிடவில்லை. தாமாகவே அவர்கள் வெளியேறினர். என் அனுமதி பெறாமல் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பதாகையை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்னையை பேசும் சபையில் தனிப்பட்ட பிரச்னைகளை எழுப்பக்கூடாது. எனினும் அவர்களின் தனிப்பட்ட பிரச்னையை பேச நான் அனுமதித்தேன். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
19-ஆக-202121:24:35 IST Report Abuse
BASKAR TETCHANA கூட்டமாக செல்ல வேண்டாம் கோரோனோ இன்னும் முடியவில்லை எனவே ஒவ்வொருவராக முடின்ஹால் சட்டியை கிழித்து கொண்டு செல்லுங்கள் என்று முதல்வர் சொன்னதால் அவர்கள் வெளியே சென்றனர்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஆக-202120:30:12 IST Report Abuse
Natarajan Ramanathan இவன் மூஞ்சியே சரியாக இல்லையே....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-202119:02:01 IST Report Abuse
Pugazh V @Vinothkumar K - Vancouver: you hv ed a wrong daily to read. This Dinamalar is pro BJP paper, run by the order of RSS. Therefore all news would be against DMK only. I suggest you may read தி இந்து , A Tamil daily,v sharpened on internet similar to this paper.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X