இந்தியா - குவைத் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை இந்தியாவைத் தாக்கியதை அடுத்து, உலகில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. குவைத் நாடும் இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது.இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. குவைத் தடை விதித்ததால் இந்த போக்குவரத்து
இந்தியா, குவைத்,  விமான சேவை,

புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை இந்தியாவைத் தாக்கியதை அடுத்து, உலகில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. குவைத் நாடும் இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. குவைத் தடை விதித்ததால் இந்த போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது கோவிட் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது.


latest tamil news


இதேபோல் வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கான விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி இருந்தது. அதுவும் மீண்டும் தொடங்கப்படும் என, குவைத் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூலை 1ம் தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
19-ஆக-202119:08:02 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . வாழ்த்துக்கள் பலர் ஊர் சென்று திரும்ப முடியாமலும் பலர் ஊருக்கு செல்ல தயாராக உள்ளனர் . இது மகிழ்ச்சியான செய்தியாக அமைய வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
19-ஆக-202115:51:15 IST Report Abuse
R.Selvaperumal August 22nd onwards
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X