நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021
Share
சென்னை: ‛‛நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஆக., 19ல் நீலகிரி, கோவை, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
மழை, சென்னை வானிலை, கோவை, நீலகிரி

சென்னை: ‛‛நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஆக., 19ல் நீலகிரி, கோவை, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 20ம் தேதி நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதைஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, வால்பாறை பி.டி.ஓ. (கோவை) 9 செ.மீ. சின்னக்கல்லார் (கோவை) 8 செ.மீ. சோலையார் (கோவை) 7 செ.மீ. சின்கோனா (கோவை), பந்தலுார் (நீலகிரி) தலா 6 செ.மீ. அவலாஞ்சி (நீலகிரி), தஞ்சாவூர் தலா 4 செ.மீ.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



இன்று ஆக., 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X