ஆப்கன் அகதிகளுக்கு விசா: டில்லியில் உள்ள ஆஸி., தூதரகம் முற்றுகை

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் விசா பெறுவதற்காக டில்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன் குவிந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் ஆப்கன் மக்களிடையே
ஆப்கன், அகதிகள், விசா, டில்லி, ஆஸி., தூதரகம், முற்றுகை, AFGHAN, REFUGEES, AUSTRALIA, VISA, DELHI, TALIBAN, ASHRAF GANI,

புதுடில்லி: டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் விசா பெறுவதற்காக டில்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன் குவிந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் ஆப்கன் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் படிப்பதற்காகவும், தொழில் செய்வதற்காகவும் சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் வேறு நாடுகளில் குடியேற முயன்று வருகின்றனர்.


latest tamil news


ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளில் குடியேற ஆப்கன் மக்கள் தயாராகி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கான் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள ஆப்கான் மக்கள் நூற்றுக்கணக்கானோர், விசா பெறுவதற்காக டில்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு குவிந்தனர்.


latest tamil news



இந்நிலையில், ஆப்கன் அகதிகள் என்பதற்கான ஒப்புதலை ஐ.நா., அளிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. இதனால் ஐ.நா.,வின் ஒப்புதல் கடிதம் பெற ஆப்கன் அகதிகள் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeyakumar - MADURAI,இந்தியா
20-ஆக-202109:49:22 IST Report Abuse
jeyakumar இந்தியாவின் அருமையும், பெருமையும், அமைதியும், சுதந்திரமும், பேச்சுரிமையும், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இதை அனைவரும் ( சிறுபான்மையினர் உட்பட ) புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
20-ஆக-202107:53:36 IST Report Abuse
மு. செந்தமிழன் பிரச்சனைன்னு வரும்போது ஒரு இஸ்லாமிய தேசம் கூட ஆதரவு தருவதில்லை
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
19-ஆக-202120:34:36 IST Report Abuse
sridhar உங்க மதத்தை விட்டுட்டு வந்தா விசா தருகிறேன் என்று சொல்ல வேண்டும். இங்கிலாந்து , France , ஜெர்மனி, Sweden நாடுகள் படும் கஷ்டம் பாருங்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X