புதுடில்லி: டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் விசா பெறுவதற்காக டில்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன் குவிந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் ஆப்கன் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் படிப்பதற்காகவும், தொழில் செய்வதற்காகவும் சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் வேறு நாடுகளில் குடியேற முயன்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளில் குடியேற ஆப்கன் மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கான் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள ஆப்கான் மக்கள் நூற்றுக்கணக்கானோர், விசா பெறுவதற்காக டில்லி ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு குவிந்தனர்.

இந்நிலையில், ஆப்கன் அகதிகள் என்பதற்கான ஒப்புதலை ஐ.நா., அளிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. இதனால் ஐ.நா.,வின் ஒப்புதல் கடிதம் பெற ஆப்கன் அகதிகள் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE