கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியில் பதில்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
மதுரை: ‛‛மாநில அரசு, எந்த மொழியில் விண்ணப்பம் செய்கிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்,'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.மதுரை எம்.பி., வெங்கடேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிச., 20 ல் நடத்த அறிவிப்பு வெளியானது. தேர்வு மையங்கள் வட மாநிலங்களில் 5,
மாநில அரசு, உயர்நீதிமன்ற கிளை, உயர்நீதிமன்ற மதுரை கிளை,  மத்திய அரசு, மொழி, வெங்கடேசன்

மதுரை: ‛‛மாநில அரசு, எந்த மொழியில் விண்ணப்பம் செய்கிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்,'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை எம்.பி., வெங்கடேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிச., 20 ல் நடத்த அறிவிப்பு வெளியானது. தேர்வு மையங்கள் வட மாநிலங்களில் 5, தென்மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் மையம் இல்லை. தமிழகம், புதுச்சேரியின் நலன் கருதி ஒரு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எப்.,பொது இயக்குனருக்கு கடிதம் எழுதினேன். மத்திய உள்துறை இணையமைச்சரிடம் இருந்து வந்த பதில் கடிதம் ஹிந்தியில் இருந்ததால், அதன் உள்ளடக்கத்தை அறிய இயலவில்லை. இதன் மூலம் சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது. இது பற்றி உள்துறை இணை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் இல்லை.
ஹிந்தி கடிதத்தை திரும்பப் பெறவோ, அப்பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ நடவடிக்கை இல்லை. தமிழக எம்.பி.,க்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்கிறது. இது, அரசியல் சாசன உரிமைகள், அலுவல் மொழிச் சட்டத்திற்கு முரணானது. தமிழக எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். நடைமுறைகளை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெங்கடேசன் குறிப்பிட்டார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஹிந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
20-ஆக-202109:29:33 IST Report Abuse
 Madhu தமிழக எம்.பி.யின் ஆதங்கம் புரிகிறது. இந்த செய்திக் குறிப்பில் நமது எம்.பி. அவர்கள் தனது கோரிக்கையை எந்த மொழியில் எழுதினார் என்று எங்காவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தேன். அறிய‌ முடியவில்லை. அவருக்குத் தெரியாத, புரியாத ஒரு மொழியில் பதில் வந்தது எனில் அதை இங்கு மதுரையில் இருக்கும் உயர்நீதி மன்ற கிளையிடம் ஏன் சொல்ல வேண்டும்? பார்லிமென்ட்டில் உள்ள சபாநாயகரிடமோ, அல்லது சம்பந்தப்பட்ட மந்திரியிடமோ நேரில் இதனைக் காண்பித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது நடந்து முடிந்த பார்லிமென்ட் தொடரின் போது இதனை எழுப்பியிருக்கலாமே ஏன் செய்யவில்லை? ஏன் எனில் இவர்களுக்குக் கூச்சல், குழப்பம் தவிர வேறு முக்கியமான வேலைகளுக்கு அப்போது அங்கே நேரமில்லாமல் போனதுதான்.
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
20-ஆக-202109:13:01 IST Report Abuse
Vijai Madurai high Court is a naxal bench. Better to shut it down
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-ஆக-202108:23:22 IST Report Abuse
VENKATASUBRAMANIAN கம்யூனிஸ்ட்ஸ் எப்போதும் இரட்டை வேடம் போடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X