ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மலைவாழ் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மலைவாழ் மக்கள் அவதி

Added : ஆக 19, 2021
Share
கெங்கவல்லி: வாழக்கோம்பையில், இணையவசதி இல்லாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில், வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி, மூலச்செங்காடு, வாழக்கோம்பை காட்டுக்கொட்டாய் கிராமங்கள் உள்ளன.இதில், வாழக்கோம்பை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், 439 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த

கெங்கவல்லி: வாழக்கோம்பையில், இணையவசதி இல்லாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில், வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி, மூலச்செங்காடு, வாழக்கோம்பை காட்டுக்கொட்டாய் கிராமங்கள் உள்ளன.
இதில், வாழக்கோம்பை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், 439 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடை, வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் மட்டும் செயல்படும். மற்ற நாளில், இந்த கடை விற்பனையாளர், தம்மம்பட்டி, பனந்தோப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பணிக்கு சென்றுவிடுகிறார்.
ரேஷன் பொருள் வினியோகம் செய்யும் நாளில், மலைவாழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று, பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த, இரு வாரங்களாக, இந்த கடையில் இணைய வசதியில்லாததால், பொதுமக்களின் ஸ்மார்ட் ரேஷன் கார்டை இயந்திரத்தில் இணைக்க முற்பட்டால், இணைய வசதியின்றி ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X