ஆப்கன் சுதந்திர தின பேரணியில் தலிபான்கள் துப்பாக்கிச்சூடு: பலர் பலி

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் சுதந்திர தின பேரணி நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதிலும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ம் ஆண்டு ஆக.,19ம் தேதி ஆப்கன் விடுதலை பெற்றது. இதனை முன்னிட்டு, இன்று, அசாதாபாத் என்ற இடத்தில் பேரணி நடந்தது. அதில், ஏராளமானவர்கள் கலந்து
AFGHAN, INDEPENDENCEDAY, RALLY, TALIBAN, FIRE, INJURE, ஆப்கன், தலிபான்கள், துப்பாக்கிச்சூடு, காயம், பலி, சுதந்திர தினம், பேரணி

காபூல்: ஆப்கனில் சுதந்திர தின பேரணி நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதிலும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ம் ஆண்டு ஆக.,19ம் தேதி ஆப்கன் விடுதலை பெற்றது. இதனை முன்னிட்டு, இன்று, அசாதாபாத் என்ற இடத்தில் பேரணி நடந்தது. அதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், அந்நாட்டு தேசிய கொடியுடன் பங்கேற்றுள்ளனர். சிலர் தலிபான்களின் கொடியை கிழித்து போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் தப்பி ஓட முயற்சிக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பேரணியில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.


latest tamil news


ஜலாலாபாத் நகரில் போராட்டம் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-ஆக-202110:04:38 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டில் இப்போ தலிபான்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202106:25:31 IST Report Abuse
NicoleThomson பாவம் என்று கூற தோன்றுகிறது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202122:17:05 IST Report Abuse
Kasimani Baskaran இதற்கு கண்டனக்குரலே இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X