காபூல்: ஆப்கனில் சுதந்திர தின பேரணி நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதிலும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ம் ஆண்டு ஆக.,19ம் தேதி ஆப்கன் விடுதலை பெற்றது. இதனை முன்னிட்டு, இன்று, அசாதாபாத் என்ற இடத்தில் பேரணி நடந்தது. அதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், அந்நாட்டு தேசிய கொடியுடன் பங்கேற்றுள்ளனர். சிலர் தலிபான்களின் கொடியை கிழித்து போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் தப்பி ஓட முயற்சிக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பேரணியில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.

ஜலாலாபாத் நகரில் போராட்டம் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE