பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் பணம், பரிசு கோப்பைகள் திருட்டு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தத்தில் வசிக்கும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் பணம், பரிசுக் கோப்பைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான அவர் நடிகர் கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த 300 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள்
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில்  பணம், பரிசு கோப்பைகள் திருட்டு

குடியாத்தம்: குடியாத்தத்தில் வசிக்கும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் பணம், பரிசுக் கோப்பைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம், 92. சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான அவர் நடிகர் கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த 300 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்துக் கொடுத்தவர். தற்போது அவர் குடியாத்தம் தர்ணம்பேட்டையில் வசித்து வருகிறார்.
கடந்த 16 ம் தேதி சென்னையில் நடந்த நடிகர் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு சென்ற அவர் நிகழ்ச்சி முடிந்ததும் அவரது மகளின் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், அவர் வீடு திறந்து கிடப்பதைப் பார்த்த உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் இன்று காலை 10:00 மணிக்கு ரத்தினம் வீட்டுக்கு வந்த போது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைத்து அதிலிருந்த 15 பட்டுப்புடவைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள், வெள்ளி, தங்கத்தினால் ஆன 50 க்கும் மேற்பட்ட பரிசு கோப்பைகள், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. மகளிடம் கொடுப்பதற்காக அவர் நகைகளை சென்னைக்கு எடுத்துச் சென்றதால் திருடு போகாமல் தப்பியது. குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X