ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பாட்னா: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடியை, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வரும் திங்கட்கிழமை சந்தித்து பேச உள்ளார்.நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கேட்டு கொண்டார்.இந்நிலையில், சமீபத்தில் பீஹார் மாநில
NARENDRAMODI, PMMODI, PRIMEMINISTER, MODI, CHIEF MINISTER, NITISHKUMAR, NITISH, CMNITISH, CASTEBASEDCENSUS, CENSUS,  BIHAR, பீஹார், பீகார், நரேந்திரமோடி, மோடி, நிதிஷ்குமார், நிதிஷ், பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ், ஜாதிவாரிகணக்கெடுப்பு,

பாட்னா: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடியை, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வரும் திங்கட்கிழமை சந்தித்து பேச உள்ளார்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் பீஹார் மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கும்படி, மோடிக்கு, நிதிஷ்குமார் கடிதம் எழுதினார். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் எனவும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், நிதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை, பீஹாரைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினருடன் சந்திக்க, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக.,23 அன்று நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தகவல் நேற்று இரவு வந்தது. இதனால், இன்று அனைவருக்கும் தகவல் தெரிவிக்கிறேன். இந்த சந்திப்பின் போது பா.ஜ., தலைவர்களும் பங்கேற்பார்கள். டில்லி செல்லும் தலைவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
20-ஆக-202100:31:43 IST Report Abuse
anbu சாதி முறைமையை ஒழித்து அனைவரும் சமம் என்ற நிலை வரவேண்டும் என்பதே சரியானது. ஆனா சாதியை வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்யவே வலதுசாரி அரசியல் கட்சிகள் பாடு படுகின்றன. பின்னர் இந்து மதத்தில் சாதி உள்ளதாக பிரச்சாரம் செய்து மத மாற்றிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றன. சாதி, மத, சமூகம் சார்ந்த சலுகைகள் யாவும் நிறுத்தப் பட்டு வருமானம் குன்றிய அனைத்து மக்களுக்கும் சலுகைகள் வழங்கி அவர்கள் முன்னேற வழி வகை செய்ய வேண்டும். இப்போது உள்ள சாதிச் சலுகைகள் பெற்று அதன் மூலம் முன்னேறிய குடும்பங்கள் தொடர்ந்து விட்டுக்கொடுக்காது அதே சாதி அடையாளத்தை வைத்து மீண்டும் மீண்டும் சலுகைகளை பெறுவதால் அதே சாதியில் உள்ள மற்ற குடும்பங்கள் முன்னேற முடியாமல் போகிறது. எவ்வளவுதான் முன்னேறினாலும் சாதி அடையாளத்தை வைத்து மற்றவர்கள் முன்னேற தடையாக இருக்கும் சாதி முறைமை சலுகைகள் நீக்கப் பட்டு வருமானம் குன்றிய அனைத்து சாதியினரும் சலுகை பெற வேண்டும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஆக-202122:20:53 IST Report Abuse
அசோக்ராஜ் மாநிலத் தலைவர்கள் ஒருமித்து தீர்மானித்தால் மாநில அளவில் இவர்களே கணக்கு எடுக்க வேண்டியதுதானே? மோடியிடம் தொங்குவானேன்?
Rate this:
Cancel
ராஜா, பெங்களூர் ஜாதிவாரி கணக்கெடுப்பு நமக்கு நாமே அடித்து கொள்ளும் கடைசி ஆணியாக இருக்கும். பிரிவினை குரூப், மதமாற்ற குரூப், பயங்கரவாத குரூப், கம்மிகள், மொழி வெறி குரூப், இனவெறி குரூப், திராவிட குரூப் எல்லாம் இதற்காக தான் காத்து கொண்டு இருக்கின்றன. பங்கு போட்டுக் கொள்ள.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X