சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

படத்தில் பிடிபட்ட வாசனை உணரிகள்!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஐந்து புலன்களில், மிகவும் குறைவாக ஆராயப்பட்டது எது தெரியுமா? மூக்கு தான். வாசனைகளை அறியும் உணர்வுக்கு ஆதாரமாக இருக்கும் உணரிகள் பற்றிய பல புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே உள்ளன.இந்த நிலையில், முதல் முறையாக வாசனையை அறியும் உணர்வான்கள் வேலைசெய்யும் விதத்தை ஆராய்ச்சியாளர்கள் படம்பிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள், கிரையோ எலக்ட்ரான்
 படத்தில் பிடிபட்ட வாசனை உணரிகள்!

ஐந்து புலன்களில், மிகவும் குறைவாக ஆராயப்பட்டது எது தெரியுமா? மூக்கு தான். வாசனைகளை அறியும் உணர்வுக்கு ஆதாரமாக இருக்கும் உணரிகள் பற்றிய பல புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே உள்ளன.இந்த நிலையில், முதல் முறையாக வாசனையை அறியும் உணர்வான்கள் வேலைசெய்யும் விதத்தை ஆராய்ச்சியாளர்கள் படம்பிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள், கிரையோ எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கொண்டு, ஒரு பூச்சியின் வாசனை உணரிகளை படம்பிடித்துள்ளனர்.மனித மூக்கில் வாசனைகளை உணர, குறைந்தது 400 வகை உணரிகள் மூக்கில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை இயங்கும் விதம் இன்னும் ஆய்வுக்குரியதாகவே உள்ளது.எனவே தான், வெறும் ஐந்தே வாசனை உணரிகளைக் கொண்ட ஒரு பூச்சியினை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். பூச்சியின் வாசனை உணரிகளை ஆராய்ந்து, உயிரினங்களின் வாசனை உணர்தல் என்ற அற்புதத்தின் மர்மங்களை அவர்கள் விரைவில் விடுவிப்பர் என நம்பலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X