சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் நடத்தையில் சந்தேகம் விஷம் குடித்து கணவர் தற்கொலை

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021
Share
Advertisement
அணைக்கட்டு:அணைக்கட்டு அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அய்யனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமு, 28. விவசாயி. மனைவி துர்கா, 24. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் மொபைல் போனுக்கு ஒருவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் ராமுவுக்கு சந்தேகம்

அணைக்கட்டு:அணைக்கட்டு அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அய்யனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமு, 28. விவசாயி. மனைவி துர்கா, 24. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் மொபைல் போனுக்கு ஒருவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் ராமுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், துர்கா கோபித்துக் கொண்டு வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஆசனாம்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல ராமு வந்தார். மனைவி வர மறுத்தார். இதனால் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று விஷம் குடித்தார்.மயங்கி விழுந்த அவரை வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.ர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X