சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த பலே பைக் திருடன் கைது.

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காங்கேயம்:காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த பலே பைக் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்தவர் அமல்ராஜ்,72, இவர் கடந்த வாரம் காங்கேயம் ரவுண்டனா பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது நபர் ஒருவர் ஹோண்டா பைக்கை திருடி தப்பி ஓடியுள்ளார். இதே போல்

காங்கேயம்:காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த பலே பைக் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்தவர் அமல்ராஜ்,72, இவர் கடந்த வாரம் காங்கேயம் ரவுண்டனா பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது நபர் ஒருவர் ஹோண்டா பைக்கை திருடி தப்பி ஓடியுள்ளார். இதே போல் கடந்த வாரத்தில் மட்டும் ஊதியூர் பகுதியில், இரு சக்கர வாகனம் திருடு போனது, மேலும் காங்கேயம் சரவணன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரொக்கம் திருடு போனது, இம்மூன்று வழக்குகளிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஹோண்டா பைக்கை திருடியபோது சிசிடிவி கேமிராவில் பதிவு ஆகி இருந்தது.

இந்நிலையில் இம்மூன்று வழக்குகளிலும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்த சமோசா சரவணன்,30, என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சரவணணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு பைக்குகள், ரூபாய் 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X