சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காங்கேயம்:10ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அவரது அம்மாவுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

காங்கேயம்:10ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அவரது அம்மாவுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 9 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமியின் தாய் காங்கேயத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஊத்துக்குளி, முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் மணிகண்டன்,21, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை உடனடியாக கைது செய்து மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-ஆக-202106:12:26 IST Report Abuse
கௌடில்யன் குழந்தையின் ஏதிர் காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் ...
Rate this:
Cancel
Gurusamy - Thoothukudi,இந்தியா
19-ஆக-202120:26:24 IST Report Abuse
Gurusamy Please check the photo the girl and message
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X