பொது செய்தி

இந்தியா

குடியிருப்பில் பயன்படுத்திய நீர் மறுசுழற்சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியாகும் பயன்படுத்தப்பட்ட நீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த மாநில மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, வணிக நிறுவனங்கள்

பெங்களூரு:பெங்களூரில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியாகும் பயன்படுத்தப்பட்ட நீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த மாநில மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் பணிகளை துவக்கி உள்ளது.இதற்கான சோதனை முயற்சியை செயல்படுத்த, பெங்களூரு எம்.ஜி., சாலையில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

இந்த பூங்கா, அதன் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில், பயன்படுத்தப்பட்ட நீரை பூங்காவில் பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் 1,035 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் உள்ள தோட்டங்களுக்கு, 1 சதுர மீட்டருக்கு 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளில், வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுநீராக வெளியேற்றப் படும் பயன்படுத்தப்பட்ட நீரை, பூங்காக்களில் பாய்ச்சுவதால், நிலத்தடி நீரை சேமிக்கலாம். குடியிருப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட நீரை பூங்காங்களில் கொண்டு செல்லும் டேங்கர்களுக்கு தனி அடையாளம் வழங்கப்படும்.

இதன் மூலம் மக்கள், அந்த டேங்கர்கள், குடிநீர் தேவைக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-ஆக-202115:15:31 IST Report Abuse
Loganathan Kuttuva நல்ல சிறந்த திட்டம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X