இரு மகள்களுடன்தம்பதி திடீர் மாயம்

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தாசரஹள்ளி:கடன் தொல்லையால் அவதிப்பட்ட தம்பதி, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, தங்களின் இரண்டு மகள்களுடன் காணாமல் போய் விட்டனர்.பெங்களூரு தாசரஹள்ளி, 5வது கிராஸ் பிரசாந்த் நகரில் வசிப்பவர் காந்தி, 43. இவர், பீன்யா தொழிற்பகுதியின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஷாலினி, 40, கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். இந்த தம்பதிக்கு 13 மற்றும் 16 வயதில் இரண்டு

தாசரஹள்ளி:கடன் தொல்லையால் அவதிப்பட்ட தம்பதி, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, தங்களின் இரண்டு மகள்களுடன் காணாமல் போய் விட்டனர்.

பெங்களூரு தாசரஹள்ளி, 5வது கிராஸ் பிரசாந்த் நகரில் வசிப்பவர் காந்தி, 43. இவர், பீன்யா தொழிற்பகுதியின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஷாலினி, 40, கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். இந்த தம்பதிக்கு 13 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.கொரோனாவுக்கு பின், இவர்களின் குடும்பம் நெருக்கடியில் சிக்கியது.

சிலரிடம் காந்தி, கடன் வாங்கினார். வட்டிக்கு வட்டி என, கடன் தொகை ஏழு லட்சம் ரூபாய்க்கும் அதிகமானது. கடன் கொடுத்தவர்கள், வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பித் தரும்படி, நெருக்கடி கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த காந்தி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.அதுகுறித்து கடிதம் எழுதி வைத்து விட்டு, குடும்பத்துடன் மாயமாகி விட்டார்.

அவரின் சகோதரர் சிரஞ்சீவி என்பவர், காந்தியை மொபைலில் தொடர்பு கொண்டும் பயனில்லை. மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.இதனால், அவர் காந்தி வீட்டுக்கு வந்து, கதவை திறந்து பார்த்த போது, தற்கொலை கடிதம் கிடைத்தது.பதறிய அவர், போலீசாரிடம் தகவல் கூறினார். மாயமான நால்வர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
20-ஆக-202110:18:41 IST Report Abuse
Srinivasan Rangarajan இந்தக்காலத்தில் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பழகி கொள்கிறார்கள் ..எனவே சேமிப்பு அறவே கிடையாது..எல்லாம் கடனில்..வீடு..கார்.. ...(EMI) அதனால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X