சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'வேட்டி கிழிஞ்சுடுமே...'

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'வேட்டி கிழிஞ்சுடுமே...'திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'மத்திய இணை அமைச்சர் முருகன் என்ன யாத்திரை வேண்டுமானாலும் செல்லட்டும்... எதை வேண்டுமானாலும் வேண்டி கொள்ளட்டும். நான் கும்பிடும் முருகனை வைத்து சொல்கிறேன். தமிழகத்தில் என்றைக்கும்
பக்க வாத்தியம்


'வேட்டி கிழிஞ்சுடுமே...'



திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'மத்திய இணை அமைச்சர் முருகன் என்ன யாத்திரை வேண்டுமானாலும் செல்லட்டும்... எதை வேண்டுமானாலும் வேண்டி கொள்ளட்டும். நான் கும்பிடும் முருகனை வைத்து சொல்கிறேன். தமிழகத்தில் என்றைக்கும் தாமரை மலராது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பா.ஜ.,வினர் வேல் யாத்திரை போனதால், தமிழகத்தில் நாலு இடத்துல தாமரையை மலர வச்சிருக்காங்க... ஆனால் தமிழகத்தில், 'கை' தான் கரைஞ்சுக்கிட்டே இருக்கே... காங்கிரசார் ஏன் யாத்திரை போகக் கூடாது...' என்றார்.
அருகிலிருந்தவர், 'யாத்திரை கிளம்புவதற்குள் கோஷ்டி சண்டையில் வேட்டி கிழிஞ்சுடுமே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஆக-202105:54:26 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் ஒற்றுமையாக இருப்பது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் சம்பள உயர்வு, ஸ்பெஷல் சலுகை அறிவிப்பின் போதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X