டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (5)
Share
தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசு மீது, எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால், பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில், முன்பை விட இன்னும் வேகமாக, அதை சுட்டிக்காட்டி விமர்சிப்போம்.'டவுட்' தனபாலு: எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தான், பிரதமர் சென்னை வரும் போதெல்லாம், 'கோ பேக் மோடி' என சமூக வலைதளங்களில் பிரசாரம்

'டவுட்' தனபாலு

தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசு மீது, எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால், பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில், முன்பை விட இன்னும் வேகமாக, அதை சுட்டிக்காட்டி விமர்சிப்போம்.

'டவுட்' தனபாலு: எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தான், பிரதமர் சென்னை வரும் போதெல்லாம், 'கோ பேக் மோடி' என சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்கிறீர்களா... மத்திய அரசு செய்துள்ள எதையாவது பாராட்டியுள்ளீர்களா... எனினும், எதிர்க்கட்சியாக இருந்த போது விமர்சித்ததை விட இப்போது வேகம் குறைந்துள்ளதே அதற்கு, ஆட்சி, அதிகாரத்திற்காகத் தான் எதிர்ப்பு வேஷமோ என்ற, 'டவுட்' மக்களுக்கு ஏற்பட்டுள்ளதே!


தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி:
ஜாதிய பாகுபாட்டுக்கு ஆளான சென்னை ஐ.ஐ.டி.,யின் விபின் என்ற உதவிப் பேராசிரியர் பதவி விலகியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை, தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது. இதை ஒரு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். ஈ.வெ.ரா.,வின் கைத்தடி நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது என்பதை, இந்த இரண்டு சம்பவங்களும் நினைவு படுத்துகின்றன.

'டவுட்' தனபாலு: இதை கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே... ஈ.வெ.ரா.,வை இத்தனை ஆண்டுகளாக துாக்கிப் பிடித்தும், அவரை போன்ற உயரிய கொள்கை உடையவர் யாரும் இல்லை என பலவாறாக பாராட்டியும், இன்னமும் நம் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படவே இல்லை என்பதைத் தான் இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்துகின்றனவோ. இது தான் நடுநிலையாளர்களின், 'டவுட்!'

அ.தி.மு.க.,வை சேர்ந்தவரும், நடிகையுமான விந்தியா:
யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூக நீதி. ஆனால், என் குடும்பம் மட்டும் தான், தி.மு.க., தலைவர் ஆகலாம் என்பது ஸ்டாலின் நீதி. உங்களுக்கு வந்தா ரத்தம், மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வின் மாவட்ட செயலராக, பெரும்பாலும், அந்த மாவட்டத்தில் எந்த ஜாதி அதிகமோ அந்த ஜாதியை சேர்ந்தவர் தான் நியமிக்கப்படுவார். எந்த தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமோ அந்த ஜாதியினர் தான் வேட்பாளராக நியமிக்கப்படுவார். தி.மு.க., தலைவர்கள் பலரும், ஜாதி பெயரால் தான் அழைக்கப்படுகின்றனர். எனவே, தக்காளி சட்னி தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X