சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மறுபடியும் மொதல்ல இருந்தா...

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மறுபடியும் மொதல்ல இருந்தா...சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை' எனக் கூறியதை பார்த்த போது, நடிகர் வடிவேலுவின், 'மறுபடியும் மொதல்ல இருந்தா...' என்ற காமெடியை நினைக்க தோன்றியது!நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்


மறுபடியும் மொதல்ல இருந்தா...சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை' எனக் கூறியதை பார்த்த போது, நடிகர் வடிவேலுவின், 'மறுபடியும் மொதல்ல இருந்தா...' என்ற காமெடியை நினைக்க தோன்றியது!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வின் ஓட்டு வங்கி முழுமையாக அ.தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.இது குறித்து அ.தி.மு.க., தலைமைக்கு வருத்தம் இருந்தாலும், அதை பற்றி பா.ம.க., விற்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை.ராமதாஸ் மீண்டும், 'பா.ம.க.,வின் முதல்வர் வேட்பாளர், அன்புமணி தான்' என அறிவித்து, வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க., கூட்டணியில் 'டீல்' பேச ஆரம்பித்து விட்டார்.'தனித்து போட்டி' என பேசுவதும், பின் ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து, 'மாங்காய்' அடிப்பதுமே, பா.ம.க.,வின் அரசியல் வரலாறு.தேர்தல்தோறும் தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைப்பதற்கு ராமதாஸ் பயன்படுத்தும் ஆயுதம் தான், 'தனித்து போட்டி' எனும் வீர வசனம்.'என் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்... சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை...' என ராமதாஸ் அறிவிப்பதும், பின் பதவி ஆசை வரும் போது அதை மறப்பதும், ராமதாசுக்கு வாடிக்கை.
இது போல பல காமெடிகள் நடத்தி, அவ்வப்போது தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுவதால், ராமதாசுக்கு நன்றி சொல்லலாம்.


'பிளாஸ்டிக்'ஜாதி ஒழிப்போம்!எஸ்.பழனிவேல், திருமாளம், திருவாரூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழரின் பெருமைக்குரிய விஷயமாக போற்றப்படுவது விருந்தோம்பல்.போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றார், வி.சி., தலைவர் திருமாவளவன்.கூட்டணி கட்சித் தலைவர் மற்றும் எம்.பி., என்ற முறையில் திருமாவளவனுக்கு உரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவரை சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, வந்த விருந்தினரை சோபாவில் அமர வைத்திருந்தால், அது சிறந்த விருந்தோம்பலாக இருந்திருக்கும். திருமாவளவன் தானாக விரும்பி அமர்ந்து கொண்டாலும், அதற்கு ஏற்ப அமைச்சரும் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, நலம் விசாரித்து இருக்கலாம்.சரி, நடந்து விட்டது எனும் போது, குறைந்தபட்சம் இந்த போட்டோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எதுவும் சொல்லவில்லை. திருமாவளவனும் அதை பெரிதுபடுத்தவில்லை.குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று தான்...பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தால், போராட்டம் நடத்த டிராக்டரோடு ராகுல் வந்திருப்பார். வைகோ வானம் தொடுமளவுக்கு ஆவேசமாக குதித்து கண்டனம் தெரிவித்து இருப்பார்.கம்யூ., கட்சியினர், 'கேரளாவில் இது போல ஒரு நாளும் நடக்காது' என மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருப்பர். முதல்வர் ஸ்டாலின், 'இது சமூக நீதி மாநிலம்; ஈ.வெ.ரா., மண்' என்றெல்லாம் பேசி
இருப்பார்.தவறு எங்கு நடந்தாலும் குற்றம் தான். ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள், 'தி.மு.க., ஆட்சியில் தவறு நடந்தால், அது குற்றம் ஆகாது' என்ற கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்.அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டில் திருமாவளவனுக்கு நடந்தது ஏற்கத்தக்கது அல்ல. 'பிளாஸ்டிக்' ஜாதி சிந்தனைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.


'ஆவினுக்கு'வந்த சோதனை!கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: இனிமேல், 'ஆவின்' பால் மாத அட்டை வேண்டுமானால், வாடிக்கையாளரின் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, குடும்ப வருமானம், தொழில் ஆகியவற்றை குறித்து கொடுக்க வேண்டுமாம்...ஆவின் நிறுவன 'அதிமேதாவி'களின் மூளையில் உதித்த அற்புதமான யோசனை இது!பெயர், முகவரி, போன் எண் வேண்டும் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து கல்வித் தகுதி, தொழில், வருமானம் போன்றவற்றை எதற்கு கேட்க வேண்டும்?நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தேவை அதிக வாடிக்கையாளர்கள்; அதன் வழியே சிறப்பான வருவாய். அதற்கு, வாடிக்கையாளரின் தொடர்பு எண், முகவரி இருந்தால் மட்டும் போதாதா?கல்வித் தகுதி எதற்கு? படித்தோருக்கு மட்டும் தான் பால் வழங்குவரா; படிக்காதோருக்கு பால் தர மாட்டார்களா?ஆவின் பாலை வாங்கி, யாரும் கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடைகின்றனரா இல்லை வெளிமாநிலத்திற்கு கடத்துகின்றனரா? எதற்காக வாடிக்கையாளரின் தொழில், அவரின் வருமானம் என்ன என்ற கேள்விகள்?
ஏற்கனவே 300 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தில் இயங்கி வருகிற ஆவின் நிறுவனம், இப்படிப்பட்ட விபரீத உத்தரவால் விரைவிலேயே, 'திவால்' ஆகிவிடும்!


தி.மு.க., அரசுஏன் கடன்வாங்கியது?எம்.சீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசின் மொத்த கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய் என, நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார்.கடந்த 2011 முதல், 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு கடன் வாங்கினர் என்பதை புள்ளி விபரமாக கூறினார். 2001 - 2006 வரை இருந்த தி.மு.க., அரசு எவ்வளவு கடன் வாங்கியது என்பது குறித்து, அவர் ஏன் தெளிவாக தெரிவிக்கவில்லை?
கடந்த 2006ல் அ.தி.மு.க., ஆட்சி முடியும் காலத்தில், 63 ஆயிரத்து 848 கோடி ரூபாய் கடன் இருந்தது. 2011ல் தி.மு.க., ஆட்சி நிறைவடையும் போது அது, 1.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.தி.மு.க., வாங்கியது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக; அ.தி.மு.க., அரசு வாங்கியது, வீண் செலவுக்காக என நிதி அமைச்சர் சொல்கிறாரா?இரு கழகங்களும் போட்டி போட்டு இலவசங்களை வழங்கினர்; நிதி நிலையை எப்படி சீர் செய்ய முடியும்?எல்லாவற்றையும் விடுங்கள்... 'இனி இலவசம் வழங்க மாட்டோம்' என, தி.மு.க., அரசு சொல்லுமா?

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஆக-202106:06:39 IST Report Abuse
D.Ambujavalli Just for a pouch of milk, furnishing all these details, it will make the consumers to discontinue their custom and switch to other private suppliers Perhaps, the officers had been 'pampered' for,thisnnouncement by private suppliers Possible
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X