சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
'அதுபோல, 'ஏராளமானோரின் வாழ்த்துகளையும், ஹிந்துக்களுக்கு எதிராக பேசுவதால் அதை விட அதிகம் பேரின் துாற்றுதலையும் சம்பாதித்துள்ளேன்' என்றும் கூறுங்களேன்...' என, எதார்த்தத்தை கூற தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:கடந்த 35 ஆண்டு கால அரசியல் பயணத்தில் என் இளமையை இழந்துள்ளேன். என் அம்மா, திருமணம் பற்றி பேசும் போது மட்டுமே அதை

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அதுபோல, 'ஏராளமானோரின் வாழ்த்துகளையும், ஹிந்துக்களுக்கு எதிராக பேசுவதால் அதை விட அதிகம் பேரின் துாற்றுதலையும் சம்பாதித்துள்ளேன்' என்றும் கூறுங்களேன்...' என, எதார்த்தத்தை கூற தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:கடந்த 35 ஆண்டு கால அரசியல் பயணத்தில் என் இளமையை இழந்துள்ளேன். என் அம்மா, திருமணம் பற்றி பேசும் போது மட்டுமே அதை உணர்ந்துள்ளேன். 25 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் உள்ளேன். எனினும் தனி அடையாளங்களுடன் விளங்குகிறேன்.


'மக்கள் கவலை, வேதனை அடைகின்றனரோ என்னவோ, அ.தி.மு.க.,வினர் அவ்வாறு அடையச் செய்து விடுவர்...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., மகளிர் அணி செயலர் வளர்மதி பேச்சு:
தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, அந்த கட்சிக்கு ஓட்டளித்து விட்டோமே என மக்கள் கவலை அடையத் துவங்கி விட்டனர். தகுதி வாய்ந்தவர்களை தேடி வருகிறோம் எனக் கூறுவது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.


'பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமானவர்கள் மீது தானே கோபப்பட முடியும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:
தமிழக அரசு போல மத்திய அரசும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் காங்கிரஸ் மீது பழிபோட்டு வருகிறது.


'கொரோனா நேரத்திலும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக நர்சுகள் சங்கத்தின் கவுரவ தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் பேச்சு:
நிரந்தர பணி பெற்றுள்ள நர்சுகளுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம் மற்றும் பிற படிகள், 3,500 தற்காலிக நர்சுகளுக்கும் வழங்க வேண்டும். இன்னமும் அவர்கள் மாதம், 14 ஆயிரம் சம்பளத்தில் தான் வேலை பார்த்து வருகின்றனர்.


'தகுதி உள்ளவர்கள் பட்டியலை தயாரித்து வருகிறோம் என்றனர். அந்த பட்டியல் தயாரானதும் தருவோம் என, அப்போதே சொல்லி இருந்தால், ஓட்டுகள் உங்களுக்கு வந்திருக்கும்...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தான் சொன்னோமே தவிர, எப்போது நிறைவேற்றுவோம் என சொல்லவில்லையே என, தமிழக நிதியமைச்சர் கேட்டுள்ளார். இது தான், தி.மு.க.,வின் சமூக நீதி!


'வெறுமனே போட்டியிட வேட்பாளர்கள் மட்டும் தானே வேண்டும்; வெற்றி பெறத் தான் தகுதியான வேட்பாளர் தேவை. எனவே, தே.மு.தி.க., எப்போதும் தயார் தான்...' என, கிண்டல் செய்யத் துாண்டும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
உள்ளாட்சி தேர்தலுக்கு, தே.மு.தி.க., தயாராக உள்ளது. தேர்தல் எந்த நேரம் வந்தாலும், அதை நாங்கள் எதிர்கொள்வோம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X