அரசியல் செய்தி

தமிழ்நாடு

பனைக்கு முக்கியத்துவம்: அனந்தன் பாராட்டு

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்' என, காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வேளாண்மைக்கு தனிச் சிறப்பு கொடுத்து, தனி பட்ஜெட் கொண்டு வரச் செய்த முதல்வரை பாராட்டுகிறேன். வேளாண் பட்ஜெட்டில், பனைக்கு கொடுக்கப் பட்டு இருக்கும் முக்கியத்துவத்தை வரவேற்கிறேன்.குறிப்பாக 76 லட்சத்திற்கு

சென்னை:'வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்' என, காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:வேளாண்மைக்கு தனிச் சிறப்பு கொடுத்து, தனி பட்ஜெட் கொண்டு வரச் செய்த முதல்வரை பாராட்டுகிறேன். வேளாண் பட்ஜெட்டில், பனைக்கு கொடுக்கப் பட்டு இருக்கும் முக்கியத்துவத்தை வரவேற்கிறேன்.குறிப்பாக 76 லட்சத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை எங்கும் இலவசமாக வழங்கவும், ஒரு லட்சம் பனை மரக்கன்றுகளை நடவும் வேண்டும்.

ரேஷன் கடைகளில், கருப்பட்டி மற்றும் பனை பொருட்களை விற்பது; பனைகளை வெட்ட தடை; தவிர்க்க முடியாத நிலையில் பனையை அகற்ற வேண்டும் என்றால், கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும், பனை மேம்பாட்டு இயக்கம் துவங்கி இருப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது. வீடுதோறும் காய்கறி தோட்டம் திட்டம் மகத்தானது. பனை ஏறும் இயந்திரம் பயன்பாட்டை பரவலாக அதிகரிக்க செய்ய, வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குமரி அனந்தன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
20-ஆக-202114:22:03 IST Report Abuse
vpurushothaman பனைத் திட்டம் நல்ல வினை தந்திருக்கிறது. குமரியாரின் நீண்ட கால வேட்கை நிறைவேறியிருப்பதாகப் பாராட்டியிருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X