இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஆக 19, 2021
Share
ஆக., 20, 2014கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பேலுாரில், 1918 டிச., 14ம் தேதி பிறந்தவர், சுந்தரரராஜ அய்யங்கார். சுருக்கமாக, பி.கே.எஸ்.அய்யங்கார். சிறு வயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர், யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 1937ல் புனே சென்று, யோகா குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இவர் எழுதிய, 'லைட் ஆன் யோகா' என்ற புத்தகம், 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. மொத்தம், 14 புத்தகங்களை

இதே நாளில் அன்று


ஆக., 20, 2014



கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பேலுாரில், 1918 டிச., 14ம் தேதி பிறந்தவர், சுந்தரரராஜ அய்யங்கார். சுருக்கமாக, பி.கே.எஸ்.அய்யங்கார். சிறு வயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர், யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 1937ல் புனே சென்று, யோகா குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இவர் எழுதிய, 'லைட் ஆன் யோகா' என்ற புத்தகம், 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. மொத்தம், 14 புத்தகங்களை எழுதியுள்ளார்.அய்யங்கார் யோகா பள்ளியை துவக்கி, எண்ணற்றோருக்கு யோகா பயிற்சி அளித்தார். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் யோகா வகுப்புகளை நடத்தினார். மேற்கு நாடுகளில் நவீன யோகாவை
பரப்பியதில், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.'பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்' உட்பட பல்வேறு விருதுகள் இவரை கவுரவித்துள்ளன. 2001ல் சீன அரசின் அஞ்சல் துறை இவரை கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது. 2014 ஆக., 20ம் தேதி தன் 95வது வயதில் இயற்கை எய்தினார்.யோகா குரு பி.கே.எஸ்.அய்யங்கார் காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X