சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் வந்தது 'பாம்பே' ரத்தம் பிரசவத்தில் தாய், சேய் நலம்!

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:அறுவை சிகிச்சை வாயிலாக, மூன்றாவது பிரசவம் நடந்த பெண்ணுக்கு தேவையான, அரிய வகை, 'பாம்பே' ரத்தம், பெங்களூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதனால், தாயும், சேயும் நலமாக உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா, 29. இவருக்கு ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3வது பிரசவத்திற்காக, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவ
 ரயிலில் வந்தது 'பாம்பே' ரத்தம் பிரசவத்தில் தாய், சேய் நலம்!

சென்னை:அறுவை சிகிச்சை வாயிலாக, மூன்றாவது பிரசவம் நடந்த பெண்ணுக்கு தேவையான, அரிய வகை, 'பாம்பே' ரத்தம், பெங்களூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதனால், தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா, 29. இவருக்கு ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3வது பிரசவத்திற்காக, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.மீனாவுக்கு சுக பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்பதால், அறுவை சிகிச்சை வாயிலாக, பிரசவம் பார்க்க டாக்டர்கள் தீர்மானித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, ரத்தம் தேவைப்படும் என்பதால், அவரது ரத்த வகையை பரிசோதனை செய்தனர்.

மீனாவுக்கு, 'பாம்பே' ரத்த வகை என்பதால், கொடையாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே, இரண்டு பிரசவத்துக்கு ரத்த தானம் வழங்கிய, பாம்பே ரத்த வகை உடைய, பெங்களூரைச் சேர்ந்த ஆதித்யா என்பவரை டாக்டர்கள் தொடர்பு கொண்டனர்.கொரோனா காலம் என்பதால் அவரால், சென்னைக்கு வர முடியவில்லை. இதனால், பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில், அவர் ரத்த தானம் செய்தார்.

பின், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் வாயிலாக, அவர் தானமாக அளித்த ரத்தம் பாதுகாப்பாக, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து, அழகான ஆண் குழந்தையை மீனா பெற்றெடுத்தார். பெங்களூரைச் சேர்ந்த ஆதித்யா, இதே பெண்ணிற்கு மூன்று முறையுடன் சேர்ந்து, 55 முறை ரத்த தானம் வழங்கி, பலருக்கும் மறுவாழ்வு அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - tokyo,ஜப்பான்
21-ஆக-202107:48:33 IST Report Abuse
Murugan good job man
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
20-ஆக-202113:06:28 IST Report Abuse
THINAKAREN KARAMANI அரிய வகை, 'பாம்பே' ரத்தத்தை 55 முறை ரத்த தானமாக வழங்கி பலரின் உயிர்காத்த அந்த "இரத்தக் கொடைவள்ளல்" திரு ஆதித்யா அவர்கள் நீடுழி வாழ்க பல்லாண்டு. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-202106:10:27 IST Report Abuse
nan vaalthukkal adhithya
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X