பொது செய்தி

தமிழ்நாடு

தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் பெருங்காயம் விலை இந்தியாவில் உயரும்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள், அதன் வாயிலாக, அந்நாட்டை முழுமையாக, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். மேலும், இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு, பெருங்காயத்துக்கான மூலப்பொருளும், உலர் பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.தற்போது, அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள், அதன் வாயிலாக, அந்நாட்டை முழுமையாக, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். மேலும், இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர்.

ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு, பெருங்காயத்துக்கான மூலப்பொருளும், உலர் பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.தற்போது, அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெருங்காயம் மற்றும் உலர் பழங்களின் விலை உயர்வதோடு, தட்டுப்பாட்டையும் உருவாக்கும் என, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பெருங்காய வியாபாரம் செய்து வரும், 'ஆச்சி மசாலா' நிறுவன கொள்முதல் மேலாளர் பிலவேந்திரன் கூறியதாவது:பெருங்காய தேவை அதிகமுள்ள நாடு இந்தியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளில், பெருங்காய மூலப்பொருட்கள் கிடைத்தாலும், ஆப்கன் மலை பிரதேசங்களில், மானாவரி பயிராக வளரும் பெருங்காய செடியில் இருந்து கிடைக்கும் மூலப்பொருள் தான் தரமாக உள்ளது.

அதோடு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, ஆப்கனில் இருந்து இறக்குமதி செய்வது தான் இந்தியாவுக்கு எளிதானது; விலை குறைவானது. ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் வழியாக, சாலை மார்க்கமாக, இந்தியாவுக்கு எடுத்து வரப்படும். இந்தியாவை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 50 லட்சம் கிலோ பெருங்காய மூலப்பொருள் தேவை. ஒரு மாதத்துக்கு முன்னர் வரை, 1 கிலோ மூலப்பொருளின் விலை, 8,000 ரூபாய்.

தற்போது, தலிபான்கள் தடை ஏற்படுத்தி விட்டதால், நிலைமை சீரடையும் வரை, கட்டாயம் தட்டுப்பாடு ஏற்படும். அதிக விலை கொடுத்தாலும், இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடிக்கும். அதே போலவே, உலர் பழங்கள் விஷயமும். வட மாநிலங்களில் சாப்பாட்டிற்குப் பின், அத்திப்பழம், உலர் திராட்சை, பாதாம் போன்ற, உலர் பழங்களை உட்கொள்ளும் பழக்கம் அதிகம். இந்திய தேவையில், 90 சதவீதம், ஆப்கன் உலர் பழங்கள் தான், பூர்த்தி செய்து வந்தன. இனி, அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

இந்த சூழல் நீடிக்க வாய்ப்பில்லை. இரு மாதங்களுக்குப் பின், நிலைமை சீராகும்.ஏனென்றால், ஆப்கனின் அடிப்படை பொருளாதாரமே, பெருங்காய மூலப்பொருள் மற்றும் உலர் பழங்கள் ஏற்றுமதியில் தான் உள்ளது. அவர்கள் வெகு காலத்துக்கு, இந்த பொருளாதாரத்தை விட்டு விட முடியாது. ஒரு கட்டத்தில், இறங்கி வருவர். இந்தியாவுக்கு பழையபடியே ஏற்றுமதி செய்வர். ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு, 30 சதவீதம் வரை வரி விதிக்கலாம். அப்போது கிலோ, 8,000 ஆயிரம் ரூபாயாக இருந்த பெருங்காய மூலப்பொருளின் விலை, 13 ஆயிரம் ரூபாயை தாண்டும். பெருங்காயம் மற்றும் உலர் பழங்களின் விலை தாறுமாறாக எகிறும். இவ்வாறு அவர் கூறினார்.


மிகப்பெரிய வர்த்தக பங்காளி!

- இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு இயக்குனர் டாக்டர் அஜய் சஹாய் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் போக்குவரத்து வழித்தடங்கள் வழியாக, சரக்குகளை நகர்த்துவதை, தலிபான்கள் நிறுத்தி உள்ளனர். இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும், பாகிஸ்தான் வழியாகவே நடைபெறுகிறது. இப்போது அது தலிபான்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தானின் மிக பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும். ஆப்கானிஸ்தானுக்கு, சர்க்கரை, மருந்துகள், ஆடை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்களை, இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அங்கிருந்து, வெங்காயம், பெருங்காய மூலப்பொருள், உலர் பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X