பொது செய்தி

இந்தியா

கூட்ஸ் ஷெட் சாலையில் பணிகள்நாளை முதல் போக்குவரத்துக்கு தடை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு:மைசூரு சாலையிலிருந்து மெஜஸ்டிக்குக்கு இணைப்பு ஏற்படுத்தும், கூட்ஸ் ஷெட் சாலையில், பெங்களூரு மாநகராட்சி சார்பில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடக்கவுள்ளதால், இச்சாலையில் நாளை முதல், மூன்று மாதத்திற்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:பி.ஜி.எஸ்., மேம்பாலத்தின், அம்பேத்கர் டவுன்

பெங்களூரு:மைசூரு சாலையிலிருந்து மெஜஸ்டிக்குக்கு இணைப்பு ஏற்படுத்தும், கூட்ஸ் ஷெட் சாலையில், பெங்களூரு மாநகராட்சி சார்பில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடக்கவுள்ளதால், இச்சாலையில் நாளை முதல், மூன்று மாதத்திற்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:பி.ஜி.எஸ்., மேம்பாலத்தின், அம்பேத்கர் டவுன் ரேம்ப்பிலிருந்து, சி.வி.ராமன் சாலை ஜங்ஷன் வரை, 1.5 கி.மீ.,யிலான கூட்ஸ் ஷெட் சாலையில், ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்படுகின்றன.மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே ஆகஸ்ட் 21 முதல், மூன்று மாதங்கள் வரை, இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களில் பணிகள் நடக்கும்.முதல் கட்டத்தில், டவுன் ரேம்ப்பிலிருந்து, மேலிமடம் சாலை வரை;இரண்டாம் கட்டத்தில் காட்டன்பேட்டின் குறுக்கு சாலை வரை பணிகள் நடக்கும். இப்பாதையில் செல்லும் வாகனங்கள், மாற்று சாலையில் செல்ல வேண்டும்.மைசூரு சாலையிலிருந்து, மெஜஸ்டிக்கை நோக்கி செல்லும் வாகனங்கள், மைசூரு சாலையின் பாடி பில்டர் ஜங்ஷனிலிருந்து, சர்வீஸ் சாலை வழியாக, சிர்சி ஜங்ஷனுக்கு வந்து, அதன்பின் இடது புறம் திரும்ப வேண்டும்.

பின்னி மில் டாங்க் பன்ட் சாலை, வாழைக்காய் மண்டி ஜங்ஷனுக்கு வந்து, பின்னிமில் சதுக்கத்தில் வலது புறம் திரும்பி, டி.சி.எம்., ராயன் சாலை ஜங்ஷனை அடைந்து, சாந்தாலா ஜங்ஷன் மூலமாக, மெஜஸ்டிக்கை அடையலாம்.பி.ஜி.எஸ்., மேம்பாலத்தில் வரும் வாகன பயணியர், டவுன் ஹால் வழியாக கே.ஜி.சாலையின் மூலம், மெஜஸ்டிக்குக்கு செல்லலாம். சாம்ராஜ்பேட் சுற்றுப்பகுதிகளின் வாகன பயணியரும் கூட, இதே பாதையில் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X