சில வரி செய்திகள்...: இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 19, 2021
Share
பிரதமர் மோடி சிலை அகற்றம்புனே: மஹாராஷ்டிராவின் புனேவில், மயூர் முண்டே என்ற பா.ஜ., தொண்டர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சமீபத்தில், சிறிய கோவில் ஒன்றை கட்டினார். 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அந்த கோவிலில், பிரதமர் மோடியின் சிலை ஒன்றையும் நிறுவி இருந்தார்.இந்நிலையில், அங்கிருந்த மோடியின் சிலையை, முண்டே அகற்றி உள்ளார். எனினும், சிலை

பிரதமர் மோடி சிலை அகற்றம்

புனே: மஹாராஷ்டிராவின் புனேவில், மயூர் முண்டே என்ற பா.ஜ., தொண்டர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சமீபத்தில், சிறிய கோவில் ஒன்றை கட்டினார். 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அந்த கோவிலில், பிரதமர் மோடியின் சிலை ஒன்றையும் நிறுவி இருந்தார்.இந்நிலையில், அங்கிருந்த மோடியின் சிலையை, முண்டே அகற்றி உள்ளார். எனினும், சிலை அகற்றப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பரம்வீர் சிங்கிற்கு அபராதம்

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் அளித்திருந்தார்.இதை விசாரித்து வரும், ஓய்வுபெற்ற நீதிபதி கைலாஷ் உத்தம்சந்த் சந்திவால் தலைமையிலான ஆணையம், விசாரணைக்கு ஆஜராக, பரம்வீர் சிங்கிற்கு உத்தரவிட்டிருந்தது. எனினும், நேற்று முன்தினம் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஆஜராக மறுத்த அவருக்கு நேற்று, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரி உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தானாமண்டி பகுதியில், பயங்கர வாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

5 போலி டாக்டர்கள் கைது

மும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள கோவாண்டி மற்றும் மன்குர்த் உள்ளிட்ட குடிசை பகுதிகளில், போலி டாக்டர்கள் சட்டவிரோதமாக, மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து, அந்த பகுதிகளில் நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில், ஐந்து போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை

புதுடில்லி: டில்லியில், பயணியர் சேவைக்காக, 1,000 பஸ்களை, டில்லி போக்குவரத்து கழகம் கொள்முதல் செய்தது. எனினும், இதில் ஊழல் நடந்துள்ளதாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்த விவகாரத்தை, கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் எடுத்துச்சென்றார். இந்நிலையில், இந்த பஸ் கொள்முதல் குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ.,க்கு நேற்று பரிந்துரைத்துள்ளது.

பாதுகாவலர் தற்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான பிரிஜ்மோகன் அகர்வாலுக்கு, விஷம்பர் ராத்தோர், 36, என்ற கான்ஸ்டபிள், பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்தார்.எட்டு ஆண்டுகளாக, அகர்வாலுக்கு சேவை புரிந்து வந்த ராத்தோர், தன் கைத் துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விசாரணையை, போலீசார் துவங்கி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X