பொது செய்தி

தமிழ்நாடு

வந்தாச்சு ஓணம்; விலை உயரக் காணோம்: வாழை விவசாயிகள் சோகம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ஓணம் பண்டிகை நெருங்கினாலும், வாழைத் தார்களின் விலை உயராததால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடியாக வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தவிர, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஏல மையத்துக்கும் கொண்டு வந்து

மேட்டுப்பாளையம்:ஓணம் பண்டிகை நெருங்கினாலும், வாழைத் தார்களின் விலை உயராததால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடியாக வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தவிர, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஏல மையத்துக்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வரும், 21ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வாழைத்தார்களின் விலை உயரும் என, விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தனர்.நேற்றுமுன்தினம் நடந்த வாழைத்தார் ஏலத்துக்கு, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னுார், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து, 110 விவசாயிகள், 3,500 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.மேட்டுப்பாளையம் -தென்திருப்பதி நால் ரோட்டில் உள்ள தனியார் வாழைத்தார் ஏலம் மைய நிர்வாகி வெள்ளிங்கிரி கூறியதாவது:ஆண்டுதோறும், ஓணத்தையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பவானிசாகர் அணையின் நீர்தேக்க நிலப்பகுதியில், தண்ணீர் தேங்கியிருந்ததால் வாழை பயிர் செய்யவில்லை. அதனால் இந்த ஆண்டு வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.தற்போதைய ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் குறைந்தபட்சம், 15 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 33 ரூபாய்க்கும்; கதலி ஒரு கிலோ குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 32 ரூபாய்க்கும் ஏலம் போனது.பூவன் குறைந்தபட்சம், 150, அதிகபட்சம், 500; தேன்வாழை குறைந்தபட்சம், 200, அதிகபட்சம், 600; செவ்வாழை குறைந்தபட்சம், 200, அதிகபட்சம், 700; ரஸ்தாளி குறைந்தபட்சம், 200, அதிகபட்சம், 550; ரோபஸ்டா, 150, அதிகபட்சம், 350 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த 2 வாரமாக இதே விலைக்கு ஏலம் போனது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களுக்கு அதிக விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X