பொது செய்தி

தமிழ்நாடு

மின்மோட்டார் பொருத்த மானியம் பெற அழைப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
அன்னுார்:மின் மோட்டார் பொருத்த, மானியம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் வட்டாரத்தில், கடந்த நிதியாண்டில், தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு நீராதார பணிகளுக்கு, 43 விவசாயிகளுக்கு, 5 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அமைக்கவும், 38 விவசாயிகளுக்கு, 13 லட்சத்து 30 ஆயிரம்

அன்னுார்:மின் மோட்டார் பொருத்த, மானியம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் வட்டாரத்தில், கடந்த நிதியாண்டில், தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு நீராதார பணிகளுக்கு, 43 விவசாயிகளுக்கு, 5 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அமைக்கவும், 38 விவசாயிகளுக்கு, 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை, தரை நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கவும், ஏழு விவசாயிகளுக்கு, 43 ஆயிரத்து 835 ரூபாய் குழாய் பதிப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் சொட்டு நீர் பாசனம் அமைத்து, விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இறைக்க, ஆயில் என்ஜின் அல்லது மின் மோட்டார் பொருத்த, 15 ஆயிரம் ரூபாயும், பாசன நீரை வயலுக்கு கொண்டு செல்ல குழாய் பதிக்க, 10 ஆயிரம் ரூபாயும், தரை நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.மானியம் பெற விவசாயிகள், அன்னுார் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் பணி உத்தரவு பெற்று, தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டு முடித்த பின், அதற்கான விபரங்களை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தால் அதற்கான மானியத்தொகை விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.விவசாயிகள், இத்திட்டத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். விபரங்களுக்கு, 97919 98833, 95784 52676, 99433 66422 எனும் மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X