பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு வரும்னு பாத்தோம்: எதுவும் சொல்லாததால் ஏமாற்றம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சோமனுார்;பட்ஜெட்டில் விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் இல்லாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் பட்ஜெட்டில், விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான எந்த அறிவிப்புகளும் இடம் பெறாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:விவசாயத்துக்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக

சோமனுார்;பட்ஜெட்டில் விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் இல்லாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் பட்ஜெட்டில், விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான எந்த அறிவிப்புகளும் இடம் பெறாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:விவசாயத்துக்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக உள்ளது விசைத்தறி. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மின் கட்டணம், உதிரிபாகங்கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, கூலி குறைப்பு உட்பட நெருக்கடிகள் தொழிலில் உள்ளன. இவற்றை, உடனுக்குடன் தீர்க்க தனிவாரியம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.அதுகுறித்து எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. அதேபோல், ஜவுளி சந்தை துவக்குதல், நெட் மீட்டர் பொறுத்த அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் எதுவும் கூறப்படவில்லை. வேஷ்டி, சேலை ரகங்கள் ஓட்டுவோருக்கு மட்டும் சில சலுகைகள் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் எங்களுக்கு பட்ஜெட் ஏமாற்றத்தை தந்துள்ளது. தற்போது, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் ஏதாவது ஒரு அறிவிப்பாவது வரும் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் உள்ளோம்.இவ்வாறு, விசைத்தறியாளர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X