பொது செய்தி

இந்தியா

2வது 'டோஸ்' போடாமல் 3.87 கோடி பேர் அலட்சியம்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :நம் நாட்டில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தியும், இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்ளாமல் 3.87 கோடி பேர் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு'
 2வது 'டோஸ்' ,3.87 கோடி பேர் அலட்சியம்

புதுடில்லி :நம் நாட்டில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தியும், இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்ளாமல் 3.87 கோடி பேர் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராமன் ஷர்மா என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் மக்கள் குறித்த தகவலை கோரி இருந்தார்.


latest tamil news



அது குறித்த விபரங்களை, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திவிட்டு, இரண்டாம் டோஸை செலுத்திக் கொள்ளாமல், மூன்று கோடியே 40 லட்சத்து 72 ஆயிரத்து 993 பேர் உள்ளனர்.
இதேபோல், கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை, 46 லட்சத்து 78 ஆயிரத்து 406 பேர், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் செலுத்திக் கொள்ளவில்லை.
இதையடுத்து, மொத்தமாக மூன்று கோடியே 87 லட்சத்து 51 ஆயிரத்து 399 பேர், இரண்டாம் டோஸை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியோர், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டா-வது டோஸ் செலுத்தத் தவறினால், அவர்களுக்கு மீண்டும் முதல் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு எந்த பரிந்துரையையும் முன்வைக்கவில்லை.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Coimbatore,இந்தியா
20-ஆக-202111:33:50 IST Report Abuse
Kannan அந்த ஆப் பில் நிறைய தவறுகள் உள்ளன அல்லது சுகாதார துறையில் டேட்டா என்ட்ரி செய்பவர்கள் அதில் முழுமையாக பயிற்சி பெறவில்லை. இவர்களது தவறுகளால் தடுப்பூசி வீண் ஆனது போல் கணக்கு காட்டுகிறது. அதிகாரிகளின் அலட்சியம் பொது மக்களை அவதி படுத்துகிறது. இந்த குறைகளை களைய கால் சென்டர் அல்லது தனி ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு நபரின் டேட்டா பதிவு செய்வதில் சிக்கல் இருந்தால் அந்த பதிவுகள் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் ஆவண செய்ய வேண்டும். கோவை சீரநாய்கன் பாளையத்தில் பதிவு செய்து மெசேஜ் வந்த பின் தான் ஊசி போடுகிறார்கள். இது நல்ல ஏற்பாடு மற்ற இடத்திலும் பின்பற்றலாமே
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
20-ஆக-202111:27:23 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கிரோம்பேட்டையில் கோவாக்ஸின் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு இரெண்டாவது டோஸ் போட முடியவில்லை. கோவி ஷீல்டு மட்டும் கிடைக்கிறது.
Rate this:
Cancel
RajanRP - Chennai,இந்தியா
20-ஆக-202109:04:53 IST Report Abuse
RajanRP நான் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டுவிட்டேன் .ஆனாலும் நான் ஒரு டோஸ் மட்டும் போட்டதாக கோவின் இணைய தலத்தில் உள்ளது .பலமுறை இதை பற்றி எழுதியும் மாற்றப்படவில்லை. சான்றிதழும் கிடைக்கவில்லை .இதை போன்று எத்தனை தவறுகளோ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X