பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிட்டு போக பயம் நோட்டம் விடுறாங்க...

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள குடியிருப்புகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து திருடும் போக்கு அதிகரித்து வருகிறது. வீரபாண்டி பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நகரில் ஒரு வீட்டில் நுழைந்த

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள குடியிருப்புகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து திருடும் போக்கு அதிகரித்து வருகிறது. வீரபாண்டி பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நகரில் ஒரு வீட்டில் நுழைந்த திருடர்கள், பீரோவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்களை திருடி சென்றனர். இதேபோல, அதே பகுதியில் அடுத்தநாள் ஒரு வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும், அப்பகுதியில் நடந்து சென்ற வாலிபரிடம், மொபைல் போனை, பைக்கில் வந்த நபர் ஒருவர் பறித்துச் சென்றார். இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அப்பகுதியில் இரவில் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில், 'வீடுகளில் விலை உயர்ந்த நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது. குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியூர் செல்லும்போது போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்து செல்வது நல்லது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X