பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்தது வரத்து; குறைந்தது வருவாய்!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உருளைக்கிழங்கு, பூண்டு ஆகியவற்றின் வரத்து அதிகளவில் இருந்தது. ஆனால் விலை குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.கேரளாவில் ஓணம் பண்டிகை, 21ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கேரள மாநில மக்கள், வீடுகளில் பூக்கோலமிட்டு, காய்கறிகளை சமைத்து வழிபடுவது வழக்கம். அதனால் ஓணம் பண்டிகை சமயத்தில், காய்கறிகள், பழங்கள்,

மேட்டுப்பாளையம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உருளைக்கிழங்கு, பூண்டு ஆகியவற்றின் வரத்து அதிகளவில் இருந்தது. ஆனால் விலை குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.கேரளாவில் ஓணம் பண்டிகை, 21ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கேரள மாநில மக்கள், வீடுகளில் பூக்கோலமிட்டு, காய்கறிகளை சமைத்து வழிபடுவது வழக்கம். அதனால் ஓணம் பண்டிகை சமயத்தில், காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலைகள் உயர்வாக இருக்கும்.மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் வளாகத்தில், 75க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகளும், 7 பூண்டு மண்டிகளும் உள்ளன. உருளைக்கிழங்கு மண்டிகளில் தினமும், பூண்டு மண்டிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏலம் நடைபெறும். நேற்று உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு, 900 டன் உருளைக் கிழங்குகள் விற்பனைக்கு வந்தன.ஓணம் பண்டிகையை முன்னிட்டு விலை உயரும் என, மண்டி உரிமையாளர்களும், நீலகிரி மாவட்ட விவசாயிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் கேரள வியாபாரிகள் யாரும் வராததால், உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.ஊட்டி உருளைக்கிழங்கு, 45 கிலோ குறைந்தபட்சம், 900 ரூபாய்க்கும், அதிகபட்சம், 1,150க்கும், குஜராத் மாநில கிழங்கு குறைந்தபட்சம், 600, அதிகபட்சம், 750, ஹாசன் கிழங்கு குறைந்தபட்சம், 800, அதிகபட்சம், 950 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரம் உருளைக்கிழங்கு குறைந்தபட்சம், 1,000 ரூபாய்க்கும், அதிகபட்சம், 1,300க்கும் ஏலம் போனது. நேற்று வரத்து அதிகமானதால் விலை குறைந்தது என, உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் ரங்கசாமி தெரிவித்தார்.மேட்டுப்பாளையத்தில் உள்ள, 7 பூண்டு மண்டிகளில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஏலம் நடைபெறும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று, 5 மண்டிகளில் ஏலம் நடைபெற்றது. இதில், 15 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு கிலோ பூண்டு குறைந்த பட்சம், 80க்கும், அதிகபட்சம், 130க்கும் விற்பனையானது. கடந்த வாரம் அதிகபட்சம், 140 ரூபாய் வரை விற்பனையானது. பூண்டு அதிகளவில் வந்ததால், விலை குறைந்தது என, பூண்டு மண்டி உரிமையாளர் சுப்பையன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X